10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தனுஷ் உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.;
டோக்கியோ,
25-வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று இந்தியாவின் பதக்க கணக்கை துப்பாக்கி சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
அவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.2 புள்ளிகள் குவித்து உலக சாதனையோடு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சக நாட்டவர் முகமத் முர்தசா வனியா 250.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் பேக் செங்காக் 223.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்தியாவின் மஹித் சந்து வெள்ளிப்பதக்கமும், கோமல் வாக்மரே வெண்கலப்பதக்கமும் வென்றனர்.


No comments:
Post a Comment