26.11.2025
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்பயணம், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் திரையரங்கில் திரைப்படம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் உற்சாகமடைந்தனர்.
வரும் டிசம்பர் 3, 2025 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளையும் மற்றும் அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று (25.11.2025) அவர்கள் விமான பயணம், மெட்ரோ ரயில் பயணம் செய்யவும் திரைப்படங்களை பார்க்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் உடனாளர்களுடன் திருச்சியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலர் மதுமதி, மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லஷ்மி, இணை இயக்குநர் ஃபெர்மி வித்யா ஆகியோர் உடனிருந்தனர்.

.jpg)
No comments:
Post a Comment