சென்னை: மாற்றுத்திறனாளிகள் உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கபே மூடப்படுவதாக செய்தி வெளிவந்தது. இது உண்மையல்ல. மியூசியம் கபே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘‘மியூசியம் கபே மூடப்படுகின்றது என்ற செய்தி தவறானது என்பதை அறிந்து மகிழ்கிறேன். அது தொடர்ந்து செயல்பட்டு வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அப்படியே நிலைநிறுத்த அனைவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது நன்றிகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment