.jpg)
27.11.2025
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.
முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ( வாய் பேச முடியாத) சிறுமி. இவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் தொல்லை அளித்ததன் விளைவாக சிறுமி கர்ப்பமுற்று, கடந்த 23-ஆம் தேதி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அகல்யா முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment