
25.11.2025
இண்டிகோ பயணி ஒருவர் சமீபத்தில் தன்னை ஊக்குவிக்கும் விதமான, முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வைக் கண்டதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.
விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி நபரை ஊழியராகப் பணி அமர்த்தி உள்ள இண்டிகோ நிறுவனத்தைப் பாராட்டி விமான பயணி ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் பதிவிற்கு இண்டிகோ நிறுவனமும் பதில் அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக விமான நிலையங்கள் என்றாலே அதிக கூட்டம் நிறைந்ததாகவும், அழுத்தமான சூழ்நிலை கொண்டதாகவும் இருக்கக்கூடும். ஆனால், இண்டிகோ பயணி ஒருவர் சமீபத்தில் தன்னை ஊக்குவிக்கும் விதமான, முற்றிலும் வித்தியாசமான ஒரு நிகழ்வைக் கண்டதாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.
வழக்கமான செக்-இன் செய்வதற்காகச் சென்ற அவர், அங்கு பணிபுரிந்த ஊழியர் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார். அந்த ஊழியர் பயணிகளை மிகவும் அமைதியான முறையில், பொறுமையாக வழிநடத்தி வந்ததாகத் தெரிவித்தார். இது பயணிகள் இடையே ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், ஊனமுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதை அடுத்து விமான நிறுவனத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். இப்படி ஒரு அற்புதமான முயற்சி எடுத்த விமான நிறுவனம் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் எளிமையாகவும், மரியாதையோடும் செய்யும் ஊழியர் ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் தன்னுடைய வீடியோவில் ஷேர் செய்துள்ளார். பின்னர் தன்னுடைய மொத்த அனுபவத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு, தன்னுடைய உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இண்டிகோ நிறுவனமும் பயணியின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ளது. இந்தப் பாராட்டை கண்டு மிகவும் மகிழ்வதாகவும், தங்கள் ஊழியர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாகவும், சமமாகவும் நடந்து கொள்வதாகவும் விமான நிலைய நிறுவனம் தெரிவித்தது. ஊழியர்களின் உழைப்பை அங்கீகரித்ததற்கும், அனைத்துத் திறமையாளர்களையும் ஊக்குவிப்பதில் தங்கள் நிறுவனத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்ததற்கும் அவர்கள் அந்தப் பயணியை நன்றியுடன் பாராட்டினர்.
.jpg)
No comments:
Post a Comment