சிங்கப்பூர்:
துப்புரவு ஊழியர் ஒருவர் மீது ரசாயனம் கலந்த நீரைத் தெளித்ததாக அவரது மேற்பார்வையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
சம்பவத்தால் அந்த ஊழியரின் பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஏற்கனவே அவருக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது.
மேற்பார்வையாளரான 36 வயது பிரியா ராமசந்திரன் மீது வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி Dulwich College வளாகத்தில் நடந்ததாகக் கூறப்பட்டது.
மின்தூக்கியில் பிரியா அந்தப் பெண் மீது ரசாயன நீரைத் தெளித்ததாக இன்னோர் ஊழியர் நீதிமன்றத்தில் கூறினார்.
அன்றைய தினம் இருவருக்கும் இடையில் சண்டை எதுவும் நடந்ததா என்பது தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வேறு இரு தருணங்களில் பிரியா பாதிக்கப்பட்டவரின் தோளையும் கழுத்தையும் இறுக்கிப் பிடித்துக் காயம் ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.
நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை, அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

No comments:
Post a Comment