FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, March 24, 2016

மாற்றுத்திறனாளிகளை அதிமுக அரசு கொச்சைப்படுத்தி விட்டது தேசிய பார்வையற்றோர் இணையம் குற்றச்சாட்டு

24.03.2016, சென்னை: தேசிய பார்வையற்றோர் இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சியின் போது, கடந்த 2010ல் அரசு பணிகளில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாகன படி ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான அரசு இலவச பஸ்பாஸ் மட்டும் வழங்கி விட்டு ஆயிரம் ரூபாய் மாத வாகன படியை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியையும், இலவச பாசையும் ஒன்றிணைத்து பார்ப்பது வேதனையாகவும், தவறாகவும் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கம் போல் வாகன படியாக ரூ.ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மாநில முழுவதும் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாற்றுத்திறனாளிகள் எப்படியெல்லாம் போராடினார்கள். அவர்கள் பட்ட சித்ரவதை என்ன என்பது நாடறிந்த விஷயம்.

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது, 3 சதவீதம் இடஒதுக்கீடு, வீட்டு வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மேலும், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின் போது இறந்து போன குப்புசாமிக்கு அடையாள அட்டையே கிடையாது என்று அரசிடம் கூறினோம். ஆனால், தமிழக அரசு நீதிமன்றத்திற்கு சென்று அவர் மாற்றுத்திறனாளியே கிடையாறு எனக்கூறி எங்களை கொச்சை படுத்தி விட்டது. இது போன்ற பல்வேறு இன்னல்களை கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். வரவிருக்கும் ஆட்சி நல்லாட்சியாக அமைய வேண்டும்.எங்களது 12 அம்ச கோரிக்கைகளை 10க்கும் மேற்பட்ட கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.சென்னை ஈசிஆரில் பஸ் மூலம் 6 பைகளில் நகை பரிமாற்றம் ஆந்திர அரசியல் பிரமுகர் தகவலால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தின் மத்திய மாவட்டத்திலிருந்து சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் இப்போது பூதாகரமாக வெளிவந்துள்ளது. ஆந்திராவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அரசியல் பிரமுகர் ராகேஷ் ரெட்டி என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் எனது ஜேஆர் ஹேப்பி டிராவல்ஸ் பஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அந்த பஸ்சை ஓட்டிச் சென்ற எனது டிரைவரை மிட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலால் அவர்கள் சொன்னபடி டிரைவர் பஸ்சை மன்னார்குடி என்ற இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பஸ்சில் சுமார் தலா 70 கிலோ எடை கொண்ட 6 பைகளை ஏற்றியுள்ளனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறிய அந்த நபர்கள் பஸ்சை கிழக்கு கடற்கரை சாலைக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலைக்கு பஸ் வந்தவுடன் அந்த நபர்கள் டிரைவரை மீண்டும் மிரட்டி பஸ்சை நிறுத்தச் சொல்லியுள்ளனர். டிரைவர் பஸ்சை நிறுத்தவே அந்த பைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் கீழே இறங்கியுள்ளனர்.

அந்த பைகளில் ஒரு பை கொஞ்சம் திறந்திருந்தது. அதில் தங்க நகைகள் ஏராளம் இருந்ததை எனது டிரைவர் பார்த்துள்ளார். நகைகள் அடங்கிய அந்த பைகளை இறக்கிய இடத்தில் உள்ள பங்களா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அந்த அரசியல் பிரமுகர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Helping make PwDs more employable

21.03.2016
How Digital India, Accessible India, Make-in-India can be game-changers for the disabled

According to the latest Census compiled in 2011, there are about 26.8 million persons with disabilities (PwDs) in India, which is approximately 2.4% of the population. Of these disabled, about 50% are visually impaired, 13% are speech/hearing impaired, 27.9% are mobility or orthopaedic impaired and 10.3% have mental illnesses. It is to be noted that only 3% of PwDs are gainfully employed in India, compared to between 30-50% in the developed world. And about 60% of PwDs are in the employable age group of 15-59 years. This translates to a total of 13.4 million PwDs (8.8 million in rural India and 4.6 million in urban India). Of these, 7.8 million are males and 5.6 million are females.

Of the total population of PwDs, 55% are literate and can be skilled and tapped – this translates to a number of 8.76 million.

During the International Day of People with Disability last year—the day is observed on December 3 each year—our Prime Minister made a call to the country to use the word “Divyang” instead of “Viklang” for the differently abled. My personal assessment is that though this is noble, but it may go in the same direction of what Mahatma Gandhi proposed: “Harijan” versus the names that our brethren were called, without much change on the ground.

Over the past few months there have been several new initiatives which have been undertaken by the government. Of these the big three happening simultaneously are ‘Digital India’, ‘Make in India’ and the one which is directly related to PwDs: ‘Accessible India’ or ‘Sugamya Bharat’.

A differently-abled person feels excluded when she is not able to do the tasks of an abled person. Therefore ‘Accessible India’, over a period of a few years, will help that PwDs have access to public offices, workplaces and the like. The added advantage is also for our elderly population, who with age may become disabled in some faculties.

With most of the trainings, university courses being made available online, and with broadband connectivity expanding to the remotest villages, ‘Digital India’ is a great opportunity for PwDs to get the best of education without travelling long distances. There is also a need to rethink some of the skilling initiatives of the government for PwDs. If the courses can be made available online, it will be a big boon for PwDs. Some may think this as a pipe-dream but changes in telecom infrastructure are happening faster than we realise. After they get trained, the same infrastructure then will help PwDs perform jobs from the comfort of their homes. In fact, this could be an ideal situation which can help make PwDs employable and also help them being as productive as anybody.

Similarly, ‘Make in India’ will open up employment opportunities for all and may help PwDs find jobs near their homes.

Our traditional form of employment for PwDs used to envisage a scenario where PwDs created things in individual capacity, without much involvement from co-workers. We have to go far beyond that thought and have to ensure that PwDs are integrated in our work culture and work environment as we move from traditional sectors to areas like e-commerce, BPO, hospitality, retail and manufacturing.

With ‘Accessible India’, ‘Digital India’ and ‘Make in India’, all that is required now is a push by corporate India to include PwDs in their hiring plans going forward.
-- The Financial Express.

Maharashtra: Special Olympics champion runs from pillar to post for govt job; to return medals in protest

22.03.2016, 

Shaikh had participated in the 2005 Special Olympics World Winter Games in Japan.

A special Olympics Champion, who has won more than 50 other medals, has been running from pillar to post to secure a government job.

Deaf and mute since birth, Anwar Shaikh, a resident of Maharashtra's Latur, has been forced to do odd jobs to make ends meet, due to the government's apathy.

Shaikh has been working in a pan and beedi shop and has now decided to return the medals and awards in protest.

Shaikh, who lives with his wife and two-year-old daughter, said he had won two gold medals in hockey in the 2005 Special Olympics World Winter Games in Japan.

“Whenever I ask for a job, I get shooed away because I can't hear or speak. What to do with the medals? Are they just for show? Medals won't fill my stomach. I have no money," Shaikh's wife translated for him.

Perth radiologist has medical licence revoked after it is revealed he fled child sex charges over the 'online grooming of a 15-year-old deaf girl' in the US




Perth radiologist struck off after child sex charges are revealed
Allegations against Dr Max Mehta of grooming deaf 15-year-old girl in US
There are claims he skipped $130,000 bail in Dallas for New Zealand
Moved to Australia where he began working under name of Robert Taylor
Calls from colleagues for more stringent background checks
Further allegations he faced financial and property charges in India

A Perth radiologist who changed his identity after fleeing child sex charges in the US where it was alleged he'd groomed a 15-year-old deaf girl online has had his medical licence revoked.

Dr Max Mehta, 46, was arrested in Dallas, Texas in May 2004 where police allege he had been preparing to meet with the girl for sex, the ABC's 7.30 reports.

He was charged with intent to commit sexual assault but fled to New Zealand before his court appearance and after his parents posted $130,000 bail.


Dr Max Mehta, 46, is alleged to have skipped $130,000 on child sex charges in the US dating back to 2004 and changed his name to Robert Taylor in New Zealand before working in Perth

There he changed his name to Robert Taylor before moving to Australia several years ago where he worked in a Perth practice.

However, the allegations against him dating back to 2004 were uncovered last year and he was suspended by the regulator, the Australian Health Practitioner Regulation Agency (AHPRA).

The Medical Board of Australia became involved and despite Dr Taylor (Mehta) denying the allegations when re-applying for his licence on at least four occasions he was disqualified.

Radiologist who fled child sex charges had working in Australia



Ross Jones was once a colleague of Robert Taylor (Mehta) and says background checks on medical professionals working in Australia is not good enough

One-time colleague Ross Jones says the claims against Dr Mehta reveals the checking process of medical practitioners in Australia does not measure up.

'The background checks are bloody awful, they're inadequate,' Mr Jones told the ABC's 7.30.

'They do a sample, say maybe 10 or 15 per cent where they do do these checks - you have to do it for everyone.

'These people have control over your children, that should not occur, everyone should be checked.'

New laws allow officials to conduct background checks on foreign doctors seeking work, however they are not retrospective against those carrying a current medical licence.

There were also claims that AHPRA had been alerted to the allegations against Dr Mehta in March, 2013 but allowed him to re-register.

It's also been revealed that Dr Mehta was also facing separate financial charges in India.

Wednesday, March 23, 2016

ஓசூர் தாசில்தார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


20/3/2016 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஓசூர் தாசில்தார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் டைட்டன் நகரியத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்கும் உறுதி மொழி ஏற்றனர் . இதில் மத்திகிரி 45 வார்டு கவுன்சிலர் சுரேஷ் பாபு மத்திகிரி RI & VAO & DDRO பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tuesday, March 22, 2016

வீடில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது: நாடாளுமன்றக் குழு

புது தில்லி, 21 March 2016
வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

எனவே அவர்களுக்கான விரிவான திட்டங்களை தயாரிக்குமாறு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (என்ஹெச்எஃப்டிசி) கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றக் குழு அண்மையில் மாநிலங்களவையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் என்ஹெச்எஃப்டிசி தொடங்கியுள்ள புதிய திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.

எனினும், ஆதரவற்ற நிலையில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதத்தில் மறுவாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் சேராத அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான எவ்வித பயன்களையும் பெறாத இதுபோன்ற மக்களுக்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதோடு, ஆதரவற்றவர் என்ற நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு வழிபிறக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலையில் காலமுறை ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து மெத்தனம் மாற்றுத்திறனாளிகள் அவதி

21.03.2016, சேலம், : மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணையை அமல்படுத்தாமல், பெரியார் பல்கலைக்கழகம் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உயர்கல்விக்காக, கடந்த 1997ம் ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தற்போது பல்கலைக்கழகத்தின் கீழ், 95 அரசு, தனியார் மற்றும் உறுப்பு கலை அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. 

மேலும், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளுக்கென பல்கலைக்கழகத்திலேயே, 25க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டர்கள், இளைநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 282 தொகுப்பூதிய பணியாளர்களும், 121 தினக்கூலி பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களில் 15 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

அரசு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தொகுப்பூதிய மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த 2008ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தார். மேலும், இந்த அரசாணையை அமல்படுத்தும் போது, மாற்றுத்திறாளிகள் சார்பாக ஏதேனும் விதிகள் தளர்வு செய்ய வேண்டின், அந்தந்த தலைமை செயலக நிர்வாக துறைகளின் ஒப்புதல் பெற்று, பணியை வரன்முறைபடுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தவர்கள், கடந்த 2010ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இதனையடுத்து, 2 வருடங்களுக்கு மேலாக, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள், அரசாணைப்படி தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என 2012ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை அந்த அரசாணையை அமல்படுத்தாமல், பெரியார் பல்கலைக்கழகம் வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தொகுப்பூதிய பணியாளர்கள் சிலர் கூறியதாவது:காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர். இது சம்பந்தமாக 2008ம் ஆண்டு ெவளியிடப்பட்ட அரசாணை, தங்களுக்கு பொருந்தாது என கூறி, பல்கலைக்கழக பதிவாளர் காலமுறை ஊதியம் வழங்க மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதனிடையே உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அந்த அரசாணை பொருந்தும் என கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் ஒரு புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும், மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவில்ைல. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, அவருக்கு ஒரு நிரந்தர பணியிடம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவும் இன்று வரை என்ன ஆனது என தெரியவில்லை.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய பணியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டலின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்யப்படாத நிலையில், புதிய நியமனம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளோம். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்குவோம் எனக்கூறி, புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசாணை பெற்று, ஒரு வருடமாக அதை அமல்படுத்தாத பல்கலைக்கழகம், தற்போது வெறும் கண்துடைப்பிற்காக திடீெரன கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி மூலம் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காலமுறை ஊதியம் கோரி, மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்திற்கு செல்லவதை தடுக்கவே இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து ெதாகுப்பூதிய பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்பின்னரே, மீதமுள்ள இடங்களுக்கு புதிய நியமனங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு தொகுப்பூதிய பணியாளர்கள் தெரிவித்தனர்.

Saturday, March 19, 2016

பயணச்சலுகை வழங்க மறுத்த ரெயில்வே அமைச்சகத்துக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

19.03.2016, சென்னை, 
தனித்து செயல்படக்கூடிய திறன்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக பயணம் செய்யும் பாதுகாவலருக்கு பயணச்சலுகை வழங்க முடியாது என்று கூறிய ரெயில்வே அமைச்சகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

சென்னை ஐகோர்ட்டில், ராஜீவ்ராஜன் என்பவர் ஒரு பொதுநல வழக்கை கடந்த 2005-ம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு விமானம், பஸ், ரெயில் பயணங்களின்போது சலுகைகள், வசதிகள் வழங்கவேண்டும். விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சில அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சில உத்தரவுகளை கடந்த 2006-ம் ஆண்டு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள ஒரு அம்சத்தை மட்டும் எதிர்த்து ரெயில்வே அமைச்சகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

சலுகை வழங்க முடியாது

அந்த மனுவில், ‘2006-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்காக வரும் பாதுகாவலருக்கும் ரெயில் பயணத்துக்கான சலுகைகளை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், பிறர் உதவி இல்லாமல் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளராக வரும் நபர்களுக்கு பயணத்தின்போது சலுகை வழங்கலாம். ஆனால், பிற உதவியில்லாமல் தனியாக பயணம் செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளுடன் வரும் நபருக்கு இந்த சலுகை வழங்க முடியாது. இது ரெயில்வே அமைச்சகத்தின் கொள்கை முடிவு மற்றும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

அசவுகரியம்

இந்த வழக்குகளின் ஆவணங்கள் பல ஆண்டுகளாக மாயமாகிவிட்டது. பின்னர், அந்த ஆவணங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே அமைச்சகம் தாக்கல் செய்துள்ள இந்த மனு அபத்தமாக உள்ளது. பிறருடைய உதவி இல்லாமல் தனியாக பயணம் செய்யும் திறன் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும், அவர்கள் தனியாக பயணம் செய்யும்போது சில அசவுகரியம் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கு உதவும் விதமாக ஒருநபர் உடன் பயணம் செய்தால், அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே, ரெயில் பயணங்களில் பாதுகாவலராக வரும் நபருக்கும் சலுகைகளை வழங்கவேண்டும். இந்த நடைமுறைதான் உலகம் முழுவதும் உள்ளது.

அபராதம்

மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்து தரப்படவேண்டும். ரெயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவு, மாற்றுத்திறனாளி சமவாய்ப்பு, உரிமை பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளன.

இந்த விவகாரத்தில் ரெயில்வே அமைச்சகம் தவறாகவும், சட்டத்துக்கு எதிராகவும், தன் மனதை செலுத்தாமலும் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ரெயில்வே அமைச்சகத்துக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதிக்கிறோம். இந்த தொகையை மனுதாரர் ராஜீவ்ராஜன் நடத்தும் ‘ஏக்தா’ என்ற தன்னார்வ அமைப்புக்கு 15 நாட்களுக்குள் தெற்கு ரெயில்வே நிர்வாகம் வழங்கவேண்டும்.

அறிக்கை

மேலும், இந்த வழக்கில் 2006-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தெற்கு ரெயில்வே அமல்படுத்தியுள்ளதா? என்பதை சரிபார்க்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், வக்கீல் தமிழ்மணி என்பவரையும் நியமிக்கிறோம். ஒருவேளை தெற்கு ரெயில்வே உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றால், அவற்றை அமல்படுத்த ஒரு திட்டத்தை 15 நாட்களுக்குள் உருவாக்கவேண்டும். பின்னர் அவற்றின் விவரத்தை அறிக்கையாக வருகிற ஏப்ரல் 27-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Friday, March 18, 2016

For the hearing impaired

18.03.2016, Students of Frontline Millennium School are currently doing a project about Special Education for the Hearing Impaired in USA, Germany and India, as a part of British Council's International School Award activities.

Following their interaction with the students of a School for the Hearing Impaired, they convey the following message to the society (us): Children with disability are also like normal children in most aspects - working hard during exams, fun loving, going to schools to take part in competitions etc. People in our society give donations to institutions taking care of disabled children on their birthdays and wedding days. Their good intention and sympathy is very laudable but what these special children need more from the society is empathy. They want these people to spare and share TIME with them. They want to be recognized and accepted as a normal part of the society, to be taken out to public places freely without their relatives feeling embarrassed or ashamed about them.

Also institutions and facilities for higher education for the disabled are very less in our country compared to Germany and USA. The concerned authorities should take action to bring in more facilities for their higher education.