புது தில்லி, 21 March 2016
வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லாதது அதிருப்தி அளிப்பதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
எனவே அவர்களுக்கான விரிவான திட்டங்களை தயாரிக்குமாறு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (என்ஹெச்எஃப்டிசி) கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றக் குழு அண்மையில் மாநிலங்களவையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் என்ஹெச்எஃப்டிசி தொடங்கியுள்ள புதிய திட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.
எனினும், ஆதரவற்ற நிலையில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதத்தில் மறுவாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பில் சேராத அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான எவ்வித பயன்களையும் பெறாத இதுபோன்ற மக்களுக்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும்.
அப்போதுதான் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதோடு, ஆதரவற்றவர் என்ற நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு வழிபிறக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment