FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, March 24, 2016

மாற்றுத்திறனாளிகளை அதிமுக அரசு கொச்சைப்படுத்தி விட்டது தேசிய பார்வையற்றோர் இணையம் குற்றச்சாட்டு

24.03.2016, சென்னை: தேசிய பார்வையற்றோர் இணையம் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:திமுக ஆட்சியின் போது, கடந்த 2010ல் அரசு பணிகளில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாகன படி ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான அரசு இலவச பஸ்பாஸ் மட்டும் வழங்கி விட்டு ஆயிரம் ரூபாய் மாத வாகன படியை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், வாகனப்படியையும், இலவச பாசையும் ஒன்றிணைத்து பார்ப்பது வேதனையாகவும், தவறாகவும் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கம் போல் வாகன படியாக ரூ.ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மாநில முழுவதும் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாற்றுத்திறனாளிகள் எப்படியெல்லாம் போராடினார்கள். அவர்கள் பட்ட சித்ரவதை என்ன என்பது நாடறிந்த விஷயம்.

முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது, 3 சதவீதம் இடஒதுக்கீடு, வீட்டு வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மேலும், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தின் போது இறந்து போன குப்புசாமிக்கு அடையாள அட்டையே கிடையாது என்று அரசிடம் கூறினோம். ஆனால், தமிழக அரசு நீதிமன்றத்திற்கு சென்று அவர் மாற்றுத்திறனாளியே கிடையாறு எனக்கூறி எங்களை கொச்சை படுத்தி விட்டது. இது போன்ற பல்வேறு இன்னல்களை கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். வரவிருக்கும் ஆட்சி நல்லாட்சியாக அமைய வேண்டும்.எங்களது 12 அம்ச கோரிக்கைகளை 10க்கும் மேற்பட்ட கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.சென்னை ஈசிஆரில் பஸ் மூலம் 6 பைகளில் நகை பரிமாற்றம் ஆந்திர அரசியல் பிரமுகர் தகவலால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தின் மத்திய மாவட்டத்திலிருந்து சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் இப்போது பூதாகரமாக வெளிவந்துள்ளது. ஆந்திராவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அரசியல் பிரமுகர் ராகேஷ் ரெட்டி என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் எனது ஜேஆர் ஹேப்பி டிராவல்ஸ் பஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அந்த பஸ்சை ஓட்டிச் சென்ற எனது டிரைவரை மிட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலால் அவர்கள் சொன்னபடி டிரைவர் பஸ்சை மன்னார்குடி என்ற இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பஸ்சில் சுமார் தலா 70 கிலோ எடை கொண்ட 6 பைகளை ஏற்றியுள்ளனர். பின்னர் அந்த பஸ்சில் ஏறிய அந்த நபர்கள் பஸ்சை கிழக்கு கடற்கரை சாலைக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலைக்கு பஸ் வந்தவுடன் அந்த நபர்கள் டிரைவரை மீண்டும் மிரட்டி பஸ்சை நிறுத்தச் சொல்லியுள்ளனர். டிரைவர் பஸ்சை நிறுத்தவே அந்த பைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் கீழே இறங்கியுள்ளனர்.

அந்த பைகளில் ஒரு பை கொஞ்சம் திறந்திருந்தது. அதில் தங்க நகைகள் ஏராளம் இருந்ததை எனது டிரைவர் பார்த்துள்ளார். நகைகள் அடங்கிய அந்த பைகளை இறக்கிய இடத்தில் உள்ள பங்களா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அந்த அரசியல் பிரமுகர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment