FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 20, 2022

"பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?"- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி

17.01.2022
காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங்... காது கேளாதவர்கள் பாரா விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கப்படாத நிலையில், தன்னைப் போன்றவர்களை அங்கீகரிக்க வேண்டும் என வீரேந்திர சிங் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தனக்கு எப்போது சம உரிமை வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் பாகிஸ்தானில் இருந்து வந்தேனா என்றும், எப்போது தனது கோரிக்கை தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்படாது எனக் கூறியதை பிரதமர் மோடி யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதனிடையே, வீரேந்திர சிங்கிற்கு உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஹரியானா விளையாட்டுத்துறை தெரிவித்து உள்ளது.


எங்களையும் கண்டு கொள்ளுங்கள்; முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி வீரர்

17.01.2022
புதுடெல்லி,
அரியானாவை சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மல்யுத்த வீரர் விரேந்தர் சிங். கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களே. நான் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளேனா? அரியானாவில் தன்னை போன்று உள்ள காது கேளாத விளையாட்டு வீரர்களை அங்கீகாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

எங்களுக்கான கமிட்டி எப்போது அமைக்கப்படும்? சம உரிமையை என்று நான் பெறுவேன்? பிரதமர் மோடி அவர்களே. உங்களை நான் சந்தித்தபோது, அநீதி நடக்க விடமாட்டோம் என கூறினீர்கள். ஆனால், தற்போது அது நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.

இதுதவிர, தன்னை போன்ற வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளை முதல்-மந்திரி அங்கீககரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர், கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.



Friday, January 14, 2022

"வண்ணங்களால்தான் என் வாழ்க்கை நகர்கிறது" - மாற்றுத்திறனாளி ஓவியரின் தன்னம்பிக்கைக் கதை!



"எனக்கு சின்ன வயசுலருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. ஓவியம் வரைவது என்றால் மட்டும் அதிக ஆர்வம்."

நாம் அன்றாடம் கடந்து செல்லும் முக்கிய சாலைகளின் ஓரங்களில், வயிற்றுப் பசியை போக்குவதற்கும், அன்றாட வாழ்வை நகர்த்திச்செல்வதற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் போராடும் பல எளியோரைச் சந்தித்திருப்போம். அம்மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பல்வேறு சவால்களைக் கொண்டது. அப்படி ஒரு மனிதரைத்தான் விழுப்புரம் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே கண்டோம். அழுக்கு சட்டையில், மெலிந்த தேகத்துடன் சாலையோரமாக அமர்ந்திருந்த அந்த சாமானிய மனிதரின் கைகள், தார்ச்சாலையில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தது. வண்ண வண்ண சுண்ணக்கட்டிகள் கரைந்துசெல்ல, ஈசனின் திருவுருவம் உருப்பெற்று கொண்டிருந்தது.

அந்த ஓவியம் முழுமை பெற்றதும் அதன் கீழே எழுதப்பட்ட வாசகம் காண்போரின் மனங்களை கணக்கச் செய்திடும் வகையில் இருந்தது. தன்னுடைய குடும்பச் சூழ்நிலையைத் தெரிவித்துவிட்டு அதன் கீழே, 'உதவி செய்யுங்கள்' என எழுதியிருந்தார் அந்த நபர். அவரிடம் பேசுவதற்காக முயற்சித்தோம்.

தான், 'காது கேட்காத பேச இயலாத மாற்றுத்திறனாளி' என்பதை சைகைகள் மூலம் தெரிவித்த அந்த நபர், 'எழுத்துக்கள் மூலம் பதிலளிக்க முடியும்' எனக் குறிப்பிட்டார். அவரைப் பற்றி அறிந்து கொள்ள எழுத்துக்கள் மூலமாகவும், சைகைகள் மூலமாகவும் பேசத் தொடங்கினோம். "என்னுடைய பெயர் மணிகண்டன். எனக்கு இப்போது 41 வயதாகிறது. நான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மாலைக்கண்டான் கிராமத்தை சேர்ந்தவன். எங்க வீட்டில் நான் ஒரே பையன் தான், எங்க அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போய் தான் என்னை வளர்த்தாங்க. அப்பா இறந்துவிட்டார், அம்மா (கல்யாணி) மட்டும் தான் இருக்காங்க.

எனக்கு சின்ன வயசிலிருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. ஓவியம் வரைவது என்றால் மட்டும் அதிக ஆர்வம். மானாமதுரையில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி ஒரு பையன், ஒரு பெண் குழந்தை இருக்காங்க. என்னுடைய மனைவி ரீட்டாவுக்கும் என்னைப் போலத்தான் காது கேட்காது, வாய் பேச முடியாது. என்னுடைய பையனுக்கு 9 வயதாகிறது, பெண்ணுக்கு 3 வயதாகிறது. என் பையன் நன்றாக இருப்பான், அவனால் பேசவும், கேட்கவும் முடியும்." என்றவரின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

தொடர்ந்து பதிலளித்தவர், "என் பெண்ணுக்கு மட்டும் தான் கண் பார்வை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் அவளாலும் பேசவும் முடியும், கேட்கவும் முடியும். எனக்கு கருத்து தெரிந்து 30 வருடங்களாக படம் வரைந்து வருகிறேன். எந்த படம் ஆனாலும் நல்லா வரைவேன். முன்பெல்லாம் சுவர் ஓவியம் வரைந்து வந்தேன். காலப்போக்கில் யாரும் அப்படி வரைவதற்கு கூப்பிடுவதில்லை, குடும்பத்தில் மிகவும் வறுமையான சூழல் வந்தது. அதனால் கடந்த சில வருடங்களாகத்தான் இப்படி சாலைகளில் ஓவியம் வரைந்து பிழைத்து வருகிறேன். நல்ல மனிதர்கள் சிலர், நான் சாலையோரங்களில் வரையும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு கொடுக்கின்ற ஐந்து, பத்து ரூபாய் காசுகளைக்கொண்டுதான் எங்களின் வாழ்க்கை செல்கிறது. இப்போ சிவன், ஐயப்பன், அம்மன், கிறிஸ்து, ஆஞ்சநேயர், கிருஷ்ணர் போன்ற பல சாமிகளின் ஓவியங்களை வரைகின்றேன்.

சீசனுக்கு ஏற்றதுபோல மக்கள் அதிகம் வரும் திருச்செந்தூர், விழுப்புரம், பழனி, திருச்சி, திருநெல்வேலி போன்ற பல பகுதிகளுக்கும் சென்று இதேபோல் ஓவியம் வரைவேன். ஒரு பகுதிக்குச் செல்கிறேன் என்றால்... அங்கு ஐந்து நாள்கள் வரை தங்கி, இது போன்று ஓவியம் வரைவேன். அதன்பின், குடும்பத்தைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துவிடுவேன்.




கண், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட்போன்’ கொள்முதல்

02.01.2022 சென்னை,
தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

25.9.2020 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், 5 ஆயிரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 ஆயிரம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்காக ஒரு திறன்பேசியின் (ஸ்மார்ட்போன்) விலை ரூ.10 ஆயிரம் என்ற மதிப்பில், அதற்கேற்ற செயலிகளுடன்கூடிய திறன்பேசிகளை வழங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்வகையில் அவற்றை ரூ.10 கோடிக்குள் கொள்முதல் செய்வதற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அனுமதி வழங்கும்படி அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அவரது கருத்துருவை பரிசீலனை செய்து, அந்தத் தொகைக்கான நிர்வாக அனுமதியை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. 25.9.2020 அன்று தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு திறன்பேசியை ரூ.10 ஆயிரம் விலைக்கு மிகாமல் கொள்முதல் செய்ய வேண்டும். விலை மற்றும் கொள்முதல் செய்யும் திறன்பேசியில் வித்தியாசம் ஏற்பட்டால் அதற்கு அரசின் ஒப்புதலை பெற வேண்டும். ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 163 குழந்தைகளுக்கு செவித்திறன்

10.01.2022
மதுரை
பிறவியிலேயே செவித்திறனற்ற 163 குழந்தைகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரெத்தினவேலு கூறியதாவது:

பிறவியிலேயே செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு மூலமாக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து செவித்திறன் கிடைக்கச் செய்துள்ளோம்.

குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி, உரிய பயிற்று நர்கள் மூலமாகப் பேச்சுப் பயிற்சிகளை வழங்கி பேச்சுத் திறன்பெற வைத்துள்ளோம். இதன் மூலம் ரூ.10 கோடியே ’72 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 550படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களை மட்டும் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தனியாக 100 படுக்கையுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கரோனா தடுப் பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்ற சிறுவர்கள் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் முன்னிலை யில் பாடல் பாடி அசத்தினர். அப் போது காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு தலைவர் தினகரன் மற்றும் மருத்துவக் குழு வினர் உடன் இருந்தனர்.


Wednesday, January 12, 2022

மக்களின் உதவியை நாடும் மாற்றுத்திறனாளி… வித்தியாச முயற்சியில் கோரிக்கை!



02.01.2022
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மாலைக்கண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி மணிகண்டன் (41). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சுவர் ஓவியம் வரைதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது புதிய காலகட்டத்தில் சுவரோவியங்கள் எந்திரங்கள் மூலம் வரையப்படுவதால் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி அங்குள்ள பொது இடங்களில் ஓவியம் வரைவார். அதில் வரும் வருமானம் மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே, இந்து கடவுளான சிவனின் ஓவியத்தை வரைந்தார். அதற்கு கீழ் அய்யா நான் ஊமை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களின் உதவியை நாடினார்.

நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள சாலையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை அங்குள்ள அனைவரும் கண்டு சென்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாவட்டம் மாவட்டமாக, மக்களின் உதவியை நாடிச் செல்லும் மாற்று திறனாளியை கடந்து செல்லும் பலரும் மனக் கவலையுடன் பார்த்து சென்றனர்.


Sunday, January 9, 2022

பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர் விபரம் சேகரிப்பு

 07.01.2022

உடுமலை:நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விபரம் பள்ளிகள் தோறும் கோரப்பட்டுள்ளது.பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவைப்பட்டால் தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவ சான்றுடன் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில், தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறு, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளிகளாக, 16 அரசு பள்ளிகள்; 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 15 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 4 சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதேபோல், நடுநிலைப்பள்ளிகளாக, 17 அரசுப்பள்ளிகள், 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 18 மெட்ரிக் பள்ளிளக், 6 சுயநிதி பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களுக்கான தேர்வு எழுதுபவரை நியமிக்கலாம்.அவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்கான காலஅவகாசம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள், இரண்டு மொழிப்பாடங்களில், ஏதேனும் ஒன்றை மற்றும் தேர்ந்தெடுத்து எழுதலாம்.இதேபோல், நரம்பியல் கோளாறு, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வின் போது கால்குலேட்டர், கிளார்க் அட்டவணை பயன்படுத்தலாம். 10ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் அறிவியல் செய்முறை தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அனுமதி கேட்கலாம். சலுகைகள் குறித்து மாணவர்களிடம் தலைமையாசிரியர்கள் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தமிழகத்தில் அரசு வேலைக்காக காதுகேளாத & வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் 13,890 பேர் காத்திருப்பு..!

 



தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், 34,41,360 ஆண்களும், 38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 19,09,646 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14,25,786 பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 26,86,932 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 12,97,693 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,245 பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,38,698 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஆண்கள் 92,010 பேரும், பெண்கள் 46,688 பேரும் பதிவு செய்துள்ளனர்.

கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,07871 பதிவு செய்துள்ளனர். அதில், 70909 ஆண்களும், 36,962 பெண்களும் பதிவு செய்துள்ளனர். விழிப்புலனிழந்தோர் மொத்தம் 16,937 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 11,668 ஆண்களும், 5,269 பெண்களும் பதிவு செய்துள்ளனர். காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,890 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 9,433 ஆண்களும், 4,457 பேர் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசு; செஸ் வீராங்கனை குமுறல்


ஜலந்தர்,
பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த செஸ் வீராங்கனை மாலிகா ஹண்டா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது டுவிட்டரில் ஹண்டா வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் மாநில அரசு தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பஞ்சாபின் முன்னாள் விளையாட்டு துறை மந்திரி பண பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் உள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அது ரத்து செய்யப்பட்டது.

இதன்பின்பு, கடந்த டிசம்பர் 31ந்தேதி விளையாட்டு துறை மந்திரி பர்கத் சிங்கை சந்தித்தேன். அவர், காது கேளாதோர் விளையாட்டுக்கு, அரசு வேலை தரவோ அல்லது பரிசு எதுவும் அளிக்கவோ முடியாது. அதற்கான கொள்கை அரசிடம் எதுவும் இல்லை என கூறுகிறார்.

முன்னாள் விளையாட்டு துறை மந்திரி கூறியவற்றை பர்கத் சிங்கிடம் கூறினேன். ஆனால் அவர், நான் கூறவில்லை. முன்னாள் மந்திரி கூறியுள்ளார். அரசால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.

காங்கிரஸ் அரசில் என்னுடைய 5 ஆண்டு காலங்கள் வீணாகி விட்டன. என்னை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர். காது கேளாதோர் விளையாட்டை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என குமுறலுடன் கூறியுள்ளார்.