02.01.2022
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மாலைக்கண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி மணிகண்டன் (41). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.சுவர் ஓவியம் வரைதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது புதிய காலகட்டத்தில் சுவரோவியங்கள் எந்திரங்கள் மூலம் வரையப்படுவதால் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.
இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி அங்குள்ள பொது இடங்களில் ஓவியம் வரைவார். அதில் வரும் வருமானம் மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே, இந்து கடவுளான சிவனின் ஓவியத்தை வரைந்தார். அதற்கு கீழ் அய்யா நான் ஊமை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களின் உதவியை நாடினார்.
நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள சாலையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை அங்குள்ள அனைவரும் கண்டு சென்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாவட்டம் மாவட்டமாக, மக்களின் உதவியை நாடிச் செல்லும் மாற்று திறனாளியை கடந்து செல்லும் பலரும் மனக் கவலையுடன் பார்த்து சென்றனர்.
No comments:
Post a Comment