FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Saturday, February 28, 2015

ZONE-WISE RECRUITMENT FOR JUNIOR ENGINEER (JE) (CIVIL ENGINEERING / ELECTRICAL ENGINEERING / MECHANICAL ENGINEERING), ASSISTANT GRADE-II (AG II) (HINDI), TYPIST (HINDI) AND ASSISTANT GRADE-III (AG III) (GENERAL / ACCOUNTS / TECHNICAL / DEPOT)

CLICK HERE
Notification

மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு வல்லுறவு: உண்மைகளை மூடி மறைக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்



மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு: மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, 28 February 2015
சென்னையில் மார்ச் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலாசார போட்டிகளுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவர் ஜி.சிதம்பரநாதன் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது:

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் மார்ச் 6-ஆம் தேதியன்று தியாகராய நகர் போக் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி திருமண மண்டபத்திலும், விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6,7 ஆகிய இரு நாள்களும் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25 கடைசித் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றுத் திறனாளிகளின் வேண்டுகோளை ஏற்று தற்போது திங்கள்கிழமை (மார்ச்.2) வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnhfctrust.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து எண். 21ஏஏ, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர், சென்னை - 600085 என்ற முகவரிக்கு மார்ச் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 - 24405524, 9840305804, 9840433964 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Thursday, February 26, 2015

DEAF மாற்றுத்திறனாளி ரயில் மோதி பலி

20.02.2015, கண்டமங்கலம்: 
கண்டமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி ரயில் மோதி இறந்தார். கண்டமங்கலம் அடுத்த பண்ணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(33). இவர், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களில் மூட்டை சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், நேற்று காலை சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரியை நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென, இவர் மீது மோதியது. இதில், இரண்டு கால்களும் துண்டான நிலையில் உயிருக்கு போராடியவரை மக்கள் மீட்டனர். உடன் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Wednesday, February 25, 2015

Krishnagiri sexual assault - "Don't hide facts"

* TARATDAC issuing statement in response to CM's speach in the state assembly on 23rd Feb on Krishnagiri deaf girl gang rape issue.

* Stmt detailed the ongoing atrocities against the victim's family by the police & admn

* Plans to go for an agitation in the state capital on 28th Feb





Click here

Juhi Chawla Interacting with India Foundation of Deaf Women




Wednesday, February 18, 2015

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை

18.02.2015, குமாரபாளையம்:
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின், இளம் மனைவி, பிளீச்சிங் பவுடரில் தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் எடையம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ரேவதி, 18. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக, குமாரபாளையம் பழைய போலீஸ் குடியிருப்பு வீதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, கடந்த, 15 நாட்களுக்கு முன் ரேவதி வந்தார்.
ரேவதியின் கணவர் பெரியசாமி வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. அவருடன் சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் சென்று கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தவர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.தாரமங்கலத்தில் கோவில் திருவிழா என்பதால், கணவர் பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் ரேவதியை அழைத்துள்ளனர். ஆனால், ரேவதி மறுத்துள்ளார். பெற்றோரும் கணவர் பெரியசாமி வீட்டுக்கு செல்ல வேண்டும் என, மகள் ரேவதியிடம் வலியுறுத்தினர்.வாய் பேசமுடியாத கணவர் வீட்டுக்கு சென்றால், மீண்டும் கல் உடைக்கும் தொழிலில் ஈடபட வேண்டி இருக்கும் என்பதால், பயந்து போன ரேவதி, கடந்த, 15ம் தேதி, வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து, தண்ணீர் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ரேவதிக்கு திருமணமாகி, ஓராண்டே ஆவதால், ஆர்.டி.ஓ., சுமன் விசாரணை நடத்துகிறார்.

Tuesday, February 17, 2015

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் சம்பத் உறுதி

16.02.2015, நெய்வேலி: 
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சம்பத் பேசினார். நெய்வேலி காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் வட்டம் 19ல் உள்ள பவுஷ்டிகாவில் முதலாம் ஆண்டு விழாக் கூட்டம் நடந்தது. நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராமஉதயகுமார், அபு, தேவானந்தன், அல்போன்ஸ், நகர தலைவர் வெற்றிவேல், செயலர் கோவிந்தராஜ், ஜெ., பேரவை ஜெயக்குமார், மாவட்ட ஒன்றியக்குழு தேவநாதன், செயலர் கமலக்கண்ணன் மற்றும் ஜோதி முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் சரவணன் வரவேற்றார். அருண்மொழித்தேவன் எம்.பி., சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். விழாவில் அமைச்சர் சம்பத் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகையில், "நாட்டில் யார் யாரோ சங்கங்கள் அமைத்து ஏதேதோ செய்து வருகின்றனர். ஆனால் மாற்றத் திறனாளிகளுக்கு நலச்சங்கங்கள் அமைத்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மாற்றத் திறனாளிகளுக்கு வீடு வழங்குவது, வேலை வாய்ப்பு என அனைத்து திட்டங்களிலும் 3 சதவீத இட ஒதுக்கீடுஒதுக்கீடு வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். கலெக்டரிடம் ஆலோசனை செய்து உங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என்றார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பிரமுகர்கள் செல்வராஜ், பாலசுப்ரமணியன், ராமலிங்கம், ஷேக் அப்துல்லா, கஞ்சமலை, தண்டபாணி, ராஜா, வழக்கறிஞர் செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

DEAF மாற்றுத்திறன் சிறுமி பலாத்கார விவகாரம் அலட்சியமாக செயல்பட்ட எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

17.02.2015, கிருஷ்ணகிரி: 
அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் தொந்தரவு புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, எஸ்.ஐ., ஏட்டு ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, அஞ்செட்டி அருகே 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, கடந்த டிசம்பர் மாதம் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். இது குறித்து அவரது பெற்றோர், தங்களின் மகளை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு தொடர்பாக, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர்.

இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டாம் முறையாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தொடர்பாக, போலீசார் ஆரம்பத்தில் மெத்தன போக்கில் செயல்பட்டதாக வந்த புகாரின் மீது, மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அஞ்செட்டி எஸ்ஐ ஜலபதி, தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய திட்டம் அறிமுகம்

17.02.2015, 
வெளிநாடுகளில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, புதிய கல்வி உதவித் தொகை திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.'இத்திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெற விரும்புவோர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் விண்ணப்பிக்கலாம்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு: 'தேசிய வெளிநாட்டு மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித் திட்டம்' என்ற பெயரில், நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ், வெளிநாடுகளில் உயர்ல்வி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர் பயன் பெறுவர்.பொறியியல் மற்றும் மேலாண்மை; அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல்; வேளாண்மை அறிவியல் மற்றும் மருத்துவம்; வர்த்தகம், கணக்கியல் மற்றும் நிதி; கலையியல், சமூக அறிவியல் மற்றும் கவின்கலை ஆகிய பிரிவுகளின் கீழ், உயர்கல்வி, ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: 
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் எதிரே, கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். வங்கி கடன் உதவி கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய தொகை வழங்காமல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலை கழிப்பதை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண <உதவித் தொகை விண்ணப்பத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்

16.02.2015சென்னை: 
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் நடக்கிறது.

கலை, இலக்கியப் போட்டிகள், கலை விழாக்கள், 6ம் தேதி சென்னை தி.நகர் போக் சாலை கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.

Monday, February 16, 2015


மாற்றுத்திறனாளி பெண் கற்பழிக்கப்பட்டதை மறைத்த போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் டி.ஜி.பி.க்கு கம்யூனிஸ்டு தலைவர் பிருந்தா காரத் கடிதம்||For-DGPSCommunist-leaderBrinda-Karat-letter

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்ப உத்தரவு; 88 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம்

13.02.2015, கோவை : 
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளிகளில், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில், நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 88 சிறப்பாசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, தமிழக அரசு சார்பில், காதுகேளாதோர், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் என்ற பிரிவுகளின் கீழ், சிறப்பு பள்ளிகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், தற்சமயம், 88 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை, விரைவில் நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவுகளின் கீழ், பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பட்டியல் மூலம், காதுகேளாதோர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 30 பேர் , பட்டதாரி அறிவியல் மற்றும் கணிதம் பாடத்துக்கு, 5 ஆசிரியர்களும், பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 37 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு, 4 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள், 4, இசை ஆசிரியர் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.மேலும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள், 5 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், 88 ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

DEAF மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் கொடுமை! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

14.02.2015,
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வல்லுறவு கொடுமையை மூடி மறைக்க முயற்சிக்கும் காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்கொச்சாவூரைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேரால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட கொடுமையான நிகழ்வில், துவக்கம் முதலே காவல்துறையும், மருத்துவர்களும் அதை மூடி மறைக்க முயற்சித்து வந்துள்ளனர். 6 நாட்கள் கழித்தே காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

முக்கிய தடயங்கள் அப்போதே அழிந்து போயிருக்கும். முதலில் பரிசோதித்த தேன்கனிக்கோட்டை மருத்துவர் தலையில் பட்ட காயத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார். பின்னர் ஓசூர் மருத்துவமனையின் பெண் மருத்துவர், பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்தார்.

பாலியல் வல்லுறவு என்பதற்கான வரையறை விரிவு படுத்தப்பட்டு, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்கான விளக்கங்கள் வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ள சூழலில், திட்டவட்டமாக வல்லுறவு நடக்கவில்லை என்று மருத்துவர் முடிவுக்கு வர முடியுமா என்பது முக்கியமான கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் படி தர்மபுரியில் மறு பரிசோதனை செய்யப் பட்டதில், ஓசூர் சான்றிதழுக்கு முரணாக அறிக்கை வந்துள்ளது.

ஆனால், அதை நிராகரிக்கும் விதத்தில், தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மருத்துவரிடம், குற்றவாளிகளின் வழக்கறிஞரைப் போல் கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறார். சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருக்கும் போது, தற்போது சிறுமி அணிந்திருக்கும் உடையை தர்மபுரி மருத்துவமனையில் ஆய்வு செய்து அதில் எவ்விதத் தடயமும் இல்லை என்று சொல்லப் பட்டுள்ளது.

விசாரணையின் பல கட்டங்களில் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மீறப்பட்டுள்ளன. காவல்நிலையத்தில் சிறுமியும், அவளது தந்தையும் வைக்கப் பட்டு தாக்கப் பட்டிருக்கின்றனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளரும் மற்றும் டி.எஸ்.பி.யும் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப் படுகிறது. ஜனவரி 30ம் தேதி, எங்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா கராத் அவர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் அமைப்பினருடன் வந்து, டிஜிபி அவர்களை சந்தித்து, விசாரணையில் நடக்கக் கூடிய பல குளறுபடிகளைச் சுட்டிக் காட்டிய பின்னும், அவை சரி செய்யப் படவில்லை. இது தொடர்ந்து தவறுகளை செய்ய ஊக்கமளித்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

Friday, February 13, 2015

Take Care to Mobile Phone Charger


ASL Storytelling - Love You Forever Books English



7th Anniversary on 8th March 2015


Wednesday, February 11, 2015

Deaf TV Movies Sign Language



பாரதீய மகிளா வங்கி இளம் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வழங்க திட்டம்

10.02.2015, 
இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்தில் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் பாரதிய மஹிளா வங்கி, ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய மகிளா வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்பிரமணியனும் பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டின் நிர்வாக பொறுப்பாளருமான லட்சுமி வெங்கடேசனும் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுள்ள பொருளாதார, சமூகரீதியில் பின் தங்கியவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பலன் பெற முடியும். தொழில் முனைவோரின் தேவையைப் பொறுத்து 50 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற முடியும்.

மதங்களை கடந்து ஆன்மிக பயணம் வந்த குஜராத் மாற்றுத் திறனாளிகள்

ராமேஸ்வரம் : 
மதங்களை கடந்து ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராமேஸ்வரம் வந்த குஜராத் மாற்று திறனாளிகளை, தமிழக பக்தர்கள் பாராட்டினார்கள்.

குஜராத் சூரத் நகர் விக்லாங் கல்யாண் சமூக அமைப்பின் நிர்வாகியான மாற்று திறனாளி கோபால்பாய் தலைமையில், இஸ்லாமியர்கள் உட்பட 21 மாற்று திறனாளிகளும், இவர்களுக்கு உதவியாக 21சமூக ஆர்வலர்களும், கடந்த பிப்.,1 ல், தென் இந்தியாவில் ஆன்மிக சுற்றுப்பயணம் துவக்கினர். இவர்கள், கர்நாடாக சாமூண்டிஸ்வரி, கேரளா குருவாயூர் கோயில்களிலும், கன்னியாகுமரியிலும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின், மதுரை, திருவண்ணாமலை, சென்னை, திருப்பதி கோயில்களுக்கு சென்று விட்டு, 5 ஆயிரம் கி.மீ., தூர ஆன்மிக சுற்றுப்பயணத்தை பிப்., 14 ல், சூரத்தில் நிறைவு செய்கின்றனர். மதங்களை கடந்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட இவர்களை, தமிழக பக்தர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து கோபால்பாய் கூறியதாவது: சாதி, மத பேதமின்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், மாற்று திறனாளிகள் தன்நம்பிக்கை இழக்கக்கூடாது,மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தென் இந்தியாவில் 5 ஆயிரம் கி.மீ., தூரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளோம், என்றார்.

Johannes Fellinger, International President for Health Commission, has a message for you!



Monday, February 9, 2015

Local Audiologist and Husband Donate to Aid Hearing-Impaired at Maryland Theatre



HAGERSTOWN, Md. - A local audiologist, Dr. Karen Hamilton, and her husband, Dr. Scott Hamilton, are contributing to the revitalization of the Maryland Theatre.

Both made a donation to install a hearing looping system within the Theatre that would enhance the experience for the hearing-impaired.

"48 million people have hearing loss in at least one ear - that's significant," said Dr. Karen Hamilton of Audiology Services. "People who have hearing loss - it's an impairment, but it's an invisible disability. People do not make special arrangements for people with hearing loss or consider that."

As long as hearing-impaired patrons have a t-coil in their hearing aides and activate them during the performance, they'll be able to hear crystal clear sound. A t-coil, also known as a telecoil, can serve as an alternate or supplemental input device for a hearing aid.

If they don't have a hearing aid, a portable listening device is available at the Theatre.

"We installed an induction hearing loop system that ties directly into their sound system," said Fred Wolford of Hagerstown Hearing. "It's a low voltage system that is wired, and when it's tied in the audio system, it produces a signal that transmits to a person who's wearing a hearing aid in the telecoil position."

Dr. Hamilton says 80 percent of all hearing aids have t-coils, but they're not all activated.

"Coming in, you won’t see it, you won’t trip over it. It's hidden - it works, but you won't see it," said Cy Hudson and Matt Hamilton of Hagerstown Hearing. "That's one of the other nice things about this system. It works with everyone’s hearing aid, but you don't have to see it. You don’t stand out - you're discreet and it provides the best experience of any type of assisted listening system available."

The seat unveiling will be held on February 12.

Rape convict acquitted despite positive DNA test in Madurai

08.02.2015, MADURAI: 
Blaming the police for "tardy and inefficient" probe, the Madras high court has acquitted a man of the charge of raping a hearing and speech-impaired woman despite a DNA test having confirmed that he was the father of a child born out of the relationship.

The DNA test had confirmed that the man was the father of the child, but that was not enough, and the police had not conducted an efficient investigation to prove the case, Justice M Sathyanarayanan of the Madurai bench of the court said, acquitting one Selvam charged with raping the woman, who is no more.

Allowing the appeal filed by Selvam, the judge blamed the police for "tardy and inefficient" investigation for not being able to confirm the conviction and sentence.

The judge said the police in Madurai district had registered a first information report in the case under sections 417 (cheating) and 376(1) (rape) of the IPC on the basis of a complaint lodged by the girl's brother in 1996.

According to the complainant, Selvam, who used to accompany the victim while grazing cattle, had raped her. The incident came to light only after she became pregnant.

The victim had told the local panchayat that Selvam had forced her into a sexual relationship, which he denied.

The FIR was registered on November 22, 1996, but the final report was filed only on September 24, 2004 and trial held from 2006. Meanwhile, the complainant, his mother and the sub-inspector who registered the case had died. They had not been examined.

The judge said the prosecution case fell on the ground as the complainant was not examined. It was very difficult to digest the explanation that the prosecution could not examine the complainant as he had died. They did not explain why it took two years to commence trial, the judge said.

As per the legal provisions, the appellant should have been sentenced to not less than seven years of imprisonment. But the Mahila court, in 2007, had sentenced him to just three years of imprisonment under section 376 (1) of the IPC.

| அரசு காப்பீடு திட்டத்தில் ரூ.8 லட்சம் வரை காது கேளாத குழந்தைகளுக்கான சிகிச்சை Dinamalar

Sunday, February 8, 2015

17th Annual Day & 7th Anniversary of NDFC TICD will Celebrate On 8 March 2015



TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD


 
TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன்வெளியிட்டார்.நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி  செயலாளர்செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
http://www.tnpsc.gov.in/docu/Annual%20planner_30_01_2015.pdf

Friday, February 6, 2015

Welcome to International Sign Language Facebook



Free hearing aids to 2,500 children in Karnataka

04.02.2015, Mangaluru: 
A half-day hearing impaired assessment camp was organised by Starkey Hearing Foundation in association with the Dakshina Kannada unit of the Indian Red Cross Society (IRCS), at Government School at Gandhinagar here on Tuesday.

A group of five experts representing Starkey, tested all the students and took impression of their ears.

All the students will be provided with pre-programmed BTE (behind the ear) digital hearing aids at a camp scheduled to be held in Bengaluru between March 1 and March 4.

Speaking to sources Sai Prasad, one of the volunteers of Starkey Hearing Foundation and Director, Hearing Health Care Clinic, said that the Foundation will provide free hearing aids to 2,500 children with hearing impaired in?Karnataka.

They have already identified around 2,000 beneficiaries after conducting assessment camps at various places including Bengaluru, Mysuru, Kollegala, Davanagere, Raichur, Kalaburagi and Vijayapura.

From Mangaluru, the team would proceed to Udupi (Feb 4) and then to Honnavar.Though they could get over 100 beneficiaries in several districts, in Dakshina Kannada, they could get only 39 beneficiaries.

According to a release, the Foundation has so far distributed over 77,000 free hearing aids to children from different parts of the country since 2007.

Starkey Foundation CEO Bill Austin and his team from the USA will be present during the distribution of aids in Bengaluru.

57th Flag Week of the Deaf: Delegation meets VP

New Delhi, Feb 5 
(PTI) A delegation of All India Federation of the Deaf (AIFD) called on Vice President Hamid Ansari here today on the occasion of the 57th Flag Week of the Deaf.

AIFD President Surrender Saini pinned a flag on the self of the Vice President, said a government release. Ansari wished the students and the other members of the delegation all the success.

Tuesday, February 3, 2015

Thinking mulaiyila mutankiyatillai flaw!|குறையை நினைத்து மூலையில முடங்கியதில்லை!- Dinakaran Ladies Corner

மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பெறலாம்

சென்னை, பிப். 2: மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை விலை ரயில் பயணச் சீட்டுகளை இனி www.irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு முன்பு மாற்றுத் திறனாளிகள் ரயில்வே முன்புதிவு கவுன்ட்டர்களுக்குச் சென்று தங்களது மாற்றுத் திறன் அடையாள அட்டையைக் காண்பித்து சலுகை விலை ரயில் பயணச் சீட்டை பெற்று வந்தனர்.

ரயில் நிலையக் கவுன்ட்டர்களுக்கு சென்று பயணச் சீட்டு முன்பதிவு செய்வது சிரமமாக இருப்பதாக பல மாற்றுத் திறனாளிகள் ரயில்வே நிர்வாகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்போது மாற்றுத் திறனாளிகள், இணையதளத்துக்குச் சென்று தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்யும்போது பயணச் சீட்டுடன், தங்களது அசல் மாற்றுத்திறன் அடையாள அட்டையை ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.

பெரும்பாலான ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப வசதியுடன் இல்லை.

இப்போது, இந்த வசதியால் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது சலுகை விலை ரயில் பயணச் சீட்டை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

ரயில்வே குரூப் - சி பணிகளுக்கு இனி குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2!

புதுடில்லி: 
இதுவரை, எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்சியல் எழுத்தர், கணக்கு எழுத்தர் உள்ளிட்ட குரூப் - சி பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 என, கல்வித் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வித் தகுதியை உயர்த்தி, ரயில்வே வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவு, புதிய பணி நியமனங்களுக்கு பின்பற்றப்படும்.

கடந்த டிசம்பர் 27ம் தேதிக்கு முன் வெளியான குரூப் - சி பணி நியமன அறிவிப்புகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே துறையில், 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில், குரூப் - சி, குரூப் - டி பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள, சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும் 21 வாரியங்கள் உள்ளன.

Monday, February 2, 2015

Summary Report - WFD Human Rights Workshop for the Balkan Deaf Community in Mostar, Bosnia and Herzegovina. (International Sign and National Sign Language)




Sunday, February 1, 2015

வரிசையில் இனி நிற்க வேண்டாம்: மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆன்லைனில் ரயில் டிக்கெட்

01.02.2015, மானாமதுரை:
 மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வேயில் தினமும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு பஸ்களை விட சவுகரியமானது என்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரயில் நிலையங்களில் நெரிசலை குறைக்க ஆன்லைன் புக்கிங் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று, தங்களின் சான்றுகளை காட்டி சலுகை கட்டணத்தில் டிக்கெட் பெறும் முறை அமலில் உள்ளது. பண்டிகை காலங்களில் ரயில் முன்பதிவிற்கும், தட்கல் டிக்கெட் பெறுவதற்கும் ஸ்டேஷன்களில் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். மணிக்கணக்கில் மாற்றுத்திறனாளிகள் நின்று முன்பதிவு செய்து வந்ததால் கடும் அவதிப்பட்டனர். தங்களுக்கு ரயில்வே மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதுபற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘‘இனி மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. ஐஆர்சிடிசி தனது வெப்சைட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இணைப்பை உருவாக்கி உள்ளது. இதில் மாற்றுத்திறனாளியின் பெயர், பிறந்த தேதி, வயது, ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ள பதிவு எண், மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவரின் சான்றிதழ் எண் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் அளிக்கவேண்டும்.

இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் ரகசிய எண் வழங்குகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயண துணைக்கு வருபவர் பெயர், முகவரி, உறவுமுறையும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது‘ என்றனர்.