16.02.2015, நெய்வேலி:
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சம்பத் பேசினார். நெய்வேலி காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் வட்டம் 19ல் உள்ள பவுஷ்டிகாவில் முதலாம் ஆண்டு விழாக் கூட்டம் நடந்தது. நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராமஉதயகுமார், அபு, தேவானந்தன், அல்போன்ஸ், நகர தலைவர் வெற்றிவேல், செயலர் கோவிந்தராஜ், ஜெ., பேரவை ஜெயக்குமார், மாவட்ட ஒன்றியக்குழு தேவநாதன், செயலர் கமலக்கண்ணன் மற்றும் ஜோதி முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் சரவணன் வரவேற்றார். அருண்மொழித்தேவன் எம்.பி., சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். விழாவில் அமைச்சர் சம்பத் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகையில், "நாட்டில் யார் யாரோ சங்கங்கள் அமைத்து ஏதேதோ செய்து வருகின்றனர். ஆனால் மாற்றத் திறனாளிகளுக்கு நலச்சங்கங்கள் அமைத்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மாற்றத் திறனாளிகளுக்கு வீடு வழங்குவது, வேலை வாய்ப்பு என அனைத்து திட்டங்களிலும் 3 சதவீத இட ஒதுக்கீடுஒதுக்கீடு வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். கலெக்டரிடம் ஆலோசனை செய்து உங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என்றார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பிரமுகர்கள் செல்வராஜ், பாலசுப்ரமணியன், ராமலிங்கம், ஷேக் அப்துல்லா, கஞ்சமலை, தண்டபாணி, ராஜா, வழக்கறிஞர் செல்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment