சென்னை, 28 February 2015
சென்னையில் மார்ச் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு, கலாசார போட்டிகளுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவர் ஜி.சிதம்பரநாதன் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது:
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் மார்ச் 6-ஆம் தேதியன்று தியாகராய நகர் போக் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி திருமண மண்டபத்திலும், விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6,7 ஆகிய இரு நாள்களும் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25 கடைசித் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மாற்றுத் திறனாளிகளின் வேண்டுகோளை ஏற்று தற்போது திங்கள்கிழமை (மார்ச்.2) வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் tnhfctrust.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து எண். 21ஏஏ, ஏரிக்கரைச் சாலை, கோட்டூர், சென்னை - 600085 என்ற முகவரிக்கு மார்ச் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 24405524, 9840305804, 9840433964 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:
Post a Comment