FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, February 1, 2015

கிருஷ்ணகிரி DEAF மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 31 January 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரை, சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது இரண்டாவது மகள் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தோட்டத்தில் இருந்த எனக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்த எனது மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளைத் தேடிய போது, சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் எனது மகள் சாலையில் மயங்கிக் கிடந்தார். இரவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி கிடையாது.

மறுநாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தோரை எனது மகள் அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் பொய் புகார் அளித்ததாக போலீஸார் எங்களை துன்புறுத்தினர்.

எனவே, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். புகாரை வாங்க மறுத்து எங்களை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி சிறுமி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி பாலியல் கொடுமைக்கு முயற்சி நடந்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் தற்போது ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையின் பெண் டாக்டரால், மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் யாருடைய நிர்பந்தமும் ஏற்படக்கூடாது. அதனால், ஓசூர் கிளைச் சிறையில் உள்ள 4 பேரையும், சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அவருக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகை இழப்பீட்டுத் தொகை ஆகாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment