FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, February 1, 2015

வரிசையில் இனி நிற்க வேண்டாம்: மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆன்லைனில் ரயில் டிக்கெட்

01.02.2015, மானாமதுரை:
 மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வேயில் தினமும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு பஸ்களை விட சவுகரியமானது என்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரயில் நிலையங்களில் நெரிசலை குறைக்க ஆன்லைன் புக்கிங் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அவர்களின் தகுதிக்கேற்ப பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று, தங்களின் சான்றுகளை காட்டி சலுகை கட்டணத்தில் டிக்கெட் பெறும் முறை அமலில் உள்ளது. பண்டிகை காலங்களில் ரயில் முன்பதிவிற்கும், தட்கல் டிக்கெட் பெறுவதற்கும் ஸ்டேஷன்களில் மிக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். மணிக்கணக்கில் மாற்றுத்திறனாளிகள் நின்று முன்பதிவு செய்து வந்ததால் கடும் அவதிப்பட்டனர். தங்களுக்கு ரயில்வே மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதுபற்றி ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘‘இனி மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. ஐஆர்சிடிசி தனது வெப்சைட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இணைப்பை உருவாக்கி உள்ளது. இதில் மாற்றுத்திறனாளியின் பெயர், பிறந்த தேதி, வயது, ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ள பதிவு எண், மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவரின் சான்றிதழ் எண் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் அளிக்கவேண்டும்.

இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் ரகசிய எண் வழங்குகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பயண துணைக்கு வருபவர் பெயர், முகவரி, உறவுமுறையும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது‘ என்றனர்.


No comments:

Post a Comment