17.02.2015, கிருஷ்ணகிரி:
அஞ்செட்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் தொந்தரவு புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, எஸ்.ஐ., ஏட்டு ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, அஞ்செட்டி அருகே 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, கடந்த டிசம்பர் மாதம் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். இது குறித்து அவரது பெற்றோர், தங்களின் மகளை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு தொடர்பாக, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர்.
இது தொடர்பாக மகளிர் அமைப்பினர், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டாம் முறையாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தொடர்பாக, போலீசார் ஆரம்பத்தில் மெத்தன போக்கில் செயல்பட்டதாக வந்த புகாரின் மீது, மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அஞ்செட்டி எஸ்ஐ ஜலபதி, தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment