ராமேஸ்வரம் :
மதங்களை கடந்து ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராமேஸ்வரம் வந்த குஜராத் மாற்று திறனாளிகளை, தமிழக பக்தர்கள் பாராட்டினார்கள்.
குஜராத் சூரத் நகர் விக்லாங் கல்யாண் சமூக அமைப்பின் நிர்வாகியான மாற்று திறனாளி கோபால்பாய் தலைமையில், இஸ்லாமியர்கள் உட்பட 21 மாற்று திறனாளிகளும், இவர்களுக்கு உதவியாக 21சமூக ஆர்வலர்களும், கடந்த பிப்.,1 ல், தென் இந்தியாவில் ஆன்மிக சுற்றுப்பயணம் துவக்கினர். இவர்கள், கர்நாடாக சாமூண்டிஸ்வரி, கேரளா குருவாயூர் கோயில்களிலும், கன்னியாகுமரியிலும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின், மதுரை, திருவண்ணாமலை, சென்னை, திருப்பதி கோயில்களுக்கு சென்று விட்டு, 5 ஆயிரம் கி.மீ., தூர ஆன்மிக சுற்றுப்பயணத்தை பிப்., 14 ல், சூரத்தில் நிறைவு செய்கின்றனர். மதங்களை கடந்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட இவர்களை, தமிழக பக்தர்கள் பாராட்டினர்.
இதுகுறித்து கோபால்பாய் கூறியதாவது: சாதி, மத பேதமின்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், மாற்று திறனாளிகள் தன்நம்பிக்கை இழக்கக்கூடாது,மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தென் இந்தியாவில் 5 ஆயிரம் கி.மீ., தூரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளோம், என்றார்.

No comments:
Post a Comment