13.02.2015, கோவை :
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளிகளில், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில், நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 88 சிறப்பாசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, தமிழக அரசு சார்பில், காதுகேளாதோர், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் என்ற பிரிவுகளின் கீழ், சிறப்பு பள்ளிகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், தற்சமயம், 88 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை, விரைவில் நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவுகளின் கீழ், பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பட்டியல் மூலம், காதுகேளாதோர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 30 பேர் , பட்டதாரி அறிவியல் மற்றும் கணிதம் பாடத்துக்கு, 5 ஆசிரியர்களும், பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், 37 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு, 4 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள், 4, இசை ஆசிரியர் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.மேலும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள், 5 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், 88 ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.

No comments:
Post a Comment