FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 16, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் கொடுமை! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

14.02.2015,
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வல்லுறவு கொடுமையை மூடி மறைக்க முயற்சிக்கும் காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்கொச்சாவூரைச் சேர்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேரால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட கொடுமையான நிகழ்வில், துவக்கம் முதலே காவல்துறையும், மருத்துவர்களும் அதை மூடி மறைக்க முயற்சித்து வந்துள்ளனர். 6 நாட்கள் கழித்தே காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

முக்கிய தடயங்கள் அப்போதே அழிந்து போயிருக்கும். முதலில் பரிசோதித்த தேன்கனிக்கோட்டை மருத்துவர் தலையில் பட்ட காயத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார். பின்னர் ஓசூர் மருத்துவமனையின் பெண் மருத்துவர், பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்தார்.

பாலியல் வல்லுறவு என்பதற்கான வரையறை விரிவு படுத்தப்பட்டு, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்கான விளக்கங்கள் வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ள சூழலில், திட்டவட்டமாக வல்லுறவு நடக்கவில்லை என்று மருத்துவர் முடிவுக்கு வர முடியுமா என்பது முக்கியமான கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் படி தர்மபுரியில் மறு பரிசோதனை செய்யப் பட்டதில், ஓசூர் சான்றிதழுக்கு முரணாக அறிக்கை வந்துள்ளது.

ஆனால், அதை நிராகரிக்கும் விதத்தில், தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மருத்துவரிடம், குற்றவாளிகளின் வழக்கறிஞரைப் போல் கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறார். சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருக்கும் போது, தற்போது சிறுமி அணிந்திருக்கும் உடையை தர்மபுரி மருத்துவமனையில் ஆய்வு செய்து அதில் எவ்விதத் தடயமும் இல்லை என்று சொல்லப் பட்டுள்ளது.

விசாரணையின் பல கட்டங்களில் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மீறப்பட்டுள்ளன. காவல்நிலையத்தில் சிறுமியும், அவளது தந்தையும் வைக்கப் பட்டு தாக்கப் பட்டிருக்கின்றனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளரும் மற்றும் டி.எஸ்.பி.யும் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப் படுகிறது. ஜனவரி 30ம் தேதி, எங்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா கராத் அவர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் அமைப்பினருடன் வந்து, டிஜிபி அவர்களை சந்தித்து, விசாரணையில் நடக்கக் கூடிய பல குளறுபடிகளைச் சுட்டிக் காட்டிய பின்னும், அவை சரி செய்யப் படவில்லை. இது தொடர்ந்து தவறுகளை செய்ய ஊக்கமளித்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment