18.02.2015, குமாரபாளையம்:
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின், இளம் மனைவி, பிளீச்சிங் பவுடரில் தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் எடையம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ரேவதி, 18. இவர்களுக்கு, ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்காக, குமாரபாளையம் பழைய போலீஸ் குடியிருப்பு வீதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, கடந்த, 15 நாட்களுக்கு முன் ரேவதி வந்தார்.
ரேவதியின் கணவர் பெரியசாமி வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. அவருடன் சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் சென்று கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தவர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.தாரமங்கலத்தில் கோவில் திருவிழா என்பதால், கணவர் பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் ரேவதியை அழைத்துள்ளனர். ஆனால், ரேவதி மறுத்துள்ளார். பெற்றோரும் கணவர் பெரியசாமி வீட்டுக்கு செல்ல வேண்டும் என, மகள் ரேவதியிடம் வலியுறுத்தினர்.வாய் பேசமுடியாத கணவர் வீட்டுக்கு சென்றால், மீண்டும் கல் உடைக்கும் தொழிலில் ஈடபட வேண்டி இருக்கும் என்பதால், பயந்து போன ரேவதி, கடந்த, 15ம் தேதி, வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து, தண்ணீர் கலந்து குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, 11 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ரேவதிக்கு திருமணமாகி, ஓராண்டே ஆவதால், ஆர்.டி.ஓ., சுமன் விசாரணை நடத்துகிறார்.

No comments:
Post a Comment