07.10.2016,
கடலூரில் தானே புயலுக்கு பிறகு கடும் சேதம் அடைந்த அரசு காதுகேளாதோர் பள்ளி, போதிய பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிடத்துக்கு இந்த பள்ளி மாற்றப்பட்டது. தற்போது அங்கு 40-க்கும் மேற்பட்ட செவித்திறன் இல்லாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியுடன் விடுதியும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தானே புயலின் போது ஏற்பட்ட சேதத்தால் தற்போது இடிந்து விழும் நிலையில், பள்ளி கட்டிடம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை மரியபாஸ்கா.
இதேபோல் பள்ளி கட்டிடம் சிமெண்ட் கூரையால் அமைக்கப்பட்டுள்ளதால், கடும் வெப்பம் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும், வாடகை வாங்குவதில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அக்கறை செலுத்துவதாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:
Post a Comment