12.10.2016, சிவகங்கை : படித்த காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி வழங்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.அச்சங்க தலைவர் கண்ணன், நிர்வாகிகள் பழனியப்பன், காதர்சுல்தான், ஜெயக்குமார், தனராஜ் ஆகியோர் கலெக்டர் மலர்விழியிடம் அளித்த மனுவில் கூறியதாவது: படித்த காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஐ.டி.ஐ., பயிற்சி தர வேண்டும். காது கேளாதோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்ப, மாத உதவித்தொகையை 3 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பணி வழங்க வேண்ணடும். டிரைவிங் லைசன்ஸ் தர வேண்டும். சொந்த இடம் உள்ளோருக்கு வீடு கட்டிதர வேண்டும். மாவட்ட காதுகேளாதோர் நல சங்கத்திற்கு கட்டடிடம் கட்டிதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment