FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 19, 2016

தேநீர் விடுதியில் வேலை பார்க்கும் DEAF விளையாட்டு வீராங்கனைகள்!

ஜாம்ஷெட்பூர் நகர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரில் அண் மையில் துவங்கப்பட்ட லா கிராவிடீ தேநீர் விடுதி இன்று அகில இந்திய அளவில் பிர பலம் அடைந்துள்ளது.

உலக நாடுகளின் தேநீர் மய்யமாகச் செயல்படும் இந்த தேநீர் விடுதி, 105 ரக தேநீரை ஆர்டரின் பேரில் தயாரித்து தேநீர் பிரியர்களுக்கு வழங்கிவருகிறது.

இதற்காக உலகின் பல பகுதியிலிருந்து தேயிலை மற்றும் மூலிகை, வாசனை செடி, வாசனை இலைகள், வாசனைப் பூக்கள் இவற்றை தருவிக்கிறார்கள். நூற்றி அய்ந்து வகை தேநீர் தயாரிப்பதினால் மட்டும் இந்த விடுதி அகில இந்திய பிரபலம் அடைய வில்லை.

இந்த விடுதியில் தேநீர், சிற்றுண்டி, உணவு வகைகள் தயாரித்து பரிமாறும் ஏழு பெண்கள் பேசும், கேட்கும் திறன் இல்லாதவர்கள். விளையாட்டு வீராங்கனைகள். சர்வதேச, தேசிய விருதுகள் பல பெற்றவர்கள்.

தகுதி, திறமை, கிடைத்த விருதுகள் எதுவும் அங்கீ கரிக்கப் படாததினால்.... வேலை எதுவும் கிடைக்காததினால், எதிர்காலம் இருண்டு கேள்விக்கு குறியாகி மிரட்டியதால் மிரண்டு போனவர்கள். அவர்களின் குறைந்த பட்ச வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கப் பட்டது தான் லா கிராவிடீ.

காது கேட்காத ஊமைகளான இந்த ஏழு பேர்களும் லா கிராவிடீ யை நிர்வகித்து வரும் நேர்த்தி அலாதியானது. விடுதிக்கு வருபவர் களை வரவேற்பது, என்ன வேண்டும் என்று கேட்டு சிற்றுண்டி தயாரித்து வாடிக்கையாளர் விரும்பும் தேநீர் என்ன என்பதை அறிந்து அதைத் தயாரித்து வழங்குவதை ஒரு கலை யாகவே செய்து வருகின்றனர். மவுன உலகில் வாழும் இவர்களின் மொழி சைகை தான்..

லா கிராவிடீ யில் பணிபுரியும் குர்விர் கவுர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறகுப் பந்தாட் டத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.

குர்விர் கவுரின் சைகை மொழி, வாடிக்கை யாளர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்குப் புரிவதில் சிரமம் ஏதும் இருந்தால் உதவிக்கு வந்து மொழி பெயர்ப்பவர் லா கிராவிடீ யின் உரிமையாளர் அவினாஷ் துக்கர்.

“ஒரு முறை நான் தற்செயலாக அவினாஷ் துக்கரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் விருது கிடைத்ததற்குப் பிறகு என்னென்ன மாற் றங்கள் ஏற்பட்டன’’ என்று விசாரித்தார். “விருது கிடைத்தது அவ்வளவுதான்.. அர சாங்க உதவிகள் எதுவும்கிடைக்கவில்லை’’.. என்று சொன்னேன். ஜார்கண்டைச் சேர்ந்த இதர விளையாட்டு வீராங்கனைகளை ஒன்று சேர்த்தார்.

மீதம் ஆறுபேருமே என்னைப் போன்றே பேச முடியாதவர்கள். காதும் கேட்காது. எங்கள் ஏழு பேரைக் கொண்டு இந்தத் தேநீர் விடுதியை உருவாக்கினார். உணவு வகைகள், பல சுவைகளில் தேநீர் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்கிறார் குர்விர் கவுர்.

லா கிராவிடீ உரிமையாளர் அவினாஷ், “இப்படி ஏழு திறமையானவர்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில் இவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் தர வேண்டி வந்தது. பயிற்சிக்குப் பிறகு உணவு தயாரிப்பதில், வாடிக்கையா ளர்களை வரவேற்பதில், ஆர்டர் பெறுவதில், பரிமாறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி. விரை வில், லா கிராவிடீ கிளைகளை ஆரம்பிக்கப் போகிறேன். இந்த வீராங்கனைகள் மாதிரி இன்னும் நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டம் உருவாக இந்த ஏழு பெண்களின் உழைப்பு எனக்குத் தந்திருக்கும் நம்பிக் கைதான் காரணம்‘’ என்கிறார் அவினாஷ்.

No comments:

Post a Comment