08.10.2016, கொண்டலாம்பட்டி: தீக்காயமடைந்த சிறுவன், சரிவர பதிலளிக்காமல், முரண்டு பிடிப்பதால், உண்மையை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த, ராஜா என்பவரின் மகன் அபிஷேக், 16. பிறவியிலேயே, வாய்பேச இயலாத சிறுவன், அஞ்செட்டியில் உள்ள, பிரத்யேக பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அவன், கொண்டலாம்பட்டி, பாட்டப்பன் நகரில் உள்ள சித்தப்பா முத்துவின் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்தான். நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனிடம், காதுகேளாத மற்றும் வாய்பேசாத சிறப்பாசிரியர்கள் சகாயராஜ், ஜெபஸ்டின் ராஜா, சிறப்பு நல மருத்துவர் பிரமிளா ராஜ்குமார் ஆகியோர், தனித்தனியே, அடுத்தடுத்து விசாரித்தனர். அவர்களிடம், மாறி, மாறி முரண்பாடான தகவலை சிறுவன் தெரிவித்தான். இதனால், தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்ற உண்மையை கண்டறிய முடியவில்லை. இதற்கு மன அழுத்தம் அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற ரீதியில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன செய்வதென தெரியாமல், போலீசார் தவிக்கின்றனர்.
No comments:
Post a Comment