FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, October 19, 2016

மனதை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளிகள் - மாவட்ட விளையாட்டு போட்டியில் அசத்தல்

திருப்பூர் : திருப்பூரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், மாணவ, மாணவியர் அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள், விஜயாபுரம் பிரைட் பள்ளியில் நேற்று நடைபெற்றது.போட்டியை கலெக்டர் ஜெயந்தி, துவக்கி வைத்தார். மாவட்ட மாற் றுத்திறனாளி நல அலுவ லர் ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.காது கேளாதோர் (ஆண்கள்) பிரிவில், 200 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி மோகன்குமார் முதலிடம், பிரேம்குமார் இரண்டாமிடம் மற்றும் துவித் மூன்றாமிடம். 400 மீ., ஓட்டத்தில், முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி கார்த்தி முதலிடம், நவீன் இரண்டாமிடம், ஹரிஹரன் மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முகமது பைசல் முதலிடம், தினேஷ் இரண்டாமிடம், பிரேம்குமார் மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி ராஜேஸ்கண்ணன் முதலிடம், அவிந்த் இரண்டாமிடம், <உடுமலை மதர் தெரசா பள்ளி ஸ்ரீதர் மூன்றாமிடம் பிடித்தனர்.காது கேளாதோர் (பெண்கள்) பிரிவில், 100 மீ., ஓட்டத்தில் முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி சண்முகபிரியா முதலிடம், 200 மீ., ஓட்டத்தில் காதுகேளாதோர் பள்ளி கவுசிகா முதலிடம், தரணி இரண்டாமிடம், அபிராமி மூன்றாமிடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில், சரஸ்வதி முதலிடம், மருதாயி இரண்டாமிடம், பாத்திமா ஜென்சி மூன்றாமிடம் பிடித்தார்.நீளம் தாண்டுதலில், தரணி முதலிடம், கௌசிகா இரண்டாமிடம், நந்தினி மூன்றாமிடம் பிடித்தார். குண்டு எறிதலில், தாராபுரம் சி.எஸ்.ஐ பள்ளி ராதிகா முதலிடம், காவியா இரண்டாமிடம், துர்காதேவி மூன்றாமிடம் பிடித்தார்.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் (பெண்கள்) பிரி வில், 50 மீ., ஓட்டத்தில், அன்னாள் சிறப்பு பள்ளி சித்ரா முதலிடம், கலைச்செல்வி இரண்டாமிடம், பாரதி வித்யாஸ்ரம் சவுமியா மூன்றாமிடம் பிடித்தார். 100 மீ., ஓட்டத்தில், அன்னை காஞ்சனா இரண்டாமிடம் பிடித்தனர்.நின்ற நிலையில் தாண்டுதல், போட்டியில் தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி ரேணுகா முதலிடம், அன்னாள் சிறப்பு பள்ளி கலைசெல்வி இரண்டாமிடம் பிடித்தனர்.பார்வைற்றோர் (ஆண்கள்) பிரிவில், நின்ற நிலையில் தாண்டுதலில், வினோத் முதலிடம், நவீன்பிரபு இரண்டாமிடம் பிடித்தனர். பெண்களுக்கான நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியில், தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி அபர்ணா முதலிடம், முனியம்மாள் இரண்டாமிடம் பிடித்தனர்.குழு போட்டியில் பங்கேற்று கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் மோகன் பிரைட் பள்ளி முதல்வர் அனுராதா, அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.கிட்ஸ் கிளப் பள்ளி சார்பில் பிஸ்கட், பழங்களும், சுப்பையா பள்ளி தண்ணீர் கேன், பிரைட் பள்ளி சார்பில், நோட்டு புத்தகம், பென்சில் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்ரோபாலிஸ் சார்பில், 300 பேருக்கு மதிய உணவு ஆகியன வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment