* 14 வயதிற்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.2.55 கோடி செலவில் கூடுதலாக தொழிற்பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
* மனநலம் பாதிக்கப்பட்ட 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும்.
* செவித்திறன் பாதிக்கப்பட்ட 660 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 33 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் கற்பித்தல், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* 266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.
* ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்படும்.
* செவித்திறன் குறையுடையோருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் 100 ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment