சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், காது கேளாத ஏழை குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், நவீன கருவி இலவசமாக பொருத்தப்பட்டது.
இங்கு செயல்படும், பேச்சு திறன் மையத்தில், 5 வயதுக்குட்பட்ட பிறவிலேயே காது கேளாத, செவித்திறன் குறைபாடுடைய 8 குழந்தைகள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் எனப்படும் நவீன கருவி, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கருவியானது செவித்திறனை அதிகப்படுத்தக்கூடியது என்றும், குளிக்கும் போதும், தூங்கும் போதும், தனியே எடுத்து வைத்துக்கொள்ளக்கூடியது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment