FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, July 29, 2019

உலகின் 'காது கேளாத அழகி’...! முதன்முறையாக பட்டம் வென்ற இந்தியப் பெண்


திறமை இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு இதைவிட சிறந்த உதராணம் வேறு என்ன இருக்க முடியும்..? அழகு என்ற ஒற்றைத் திறமையைக் கொண்டு தன்னிடம் இருக்கும் குறையை முறியடித்திருக்கிறார் 21 வயது விதிஷா பாலியன் (Vidisha Baliyan).

என்னுடய வெற்றிக் கைத்தட்டல்கள் எனக்கு கேட்கவில்லை என்றாலும்.. என்னுடைய சாதனையை உலகமே கேட்கச் செய்துவிட்டேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரியாக வெற்றி கண்டிருக்கிறார் விதிஷா. அதுவும் இந்தியாவில் முதன்முறையாக இந்த பட்டத்தைப் பெறும் முதல் பெண் என்ற வரலாற்று தடத்திலும் பெயர் பதித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முசாஃபர் நகரைச் சேர்ந்த விதிஷா குழந்தைப் பருவத்திலிருந்தே காது கேட்காத குறைபாடோடு வளர்ந்துள்ளார். வலது காது 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்துள்ளது. இடது புறம் முற்றிலுமாக காது கேட்காது.

இந்நிகழ்ச்சி சவுத் ஆப்ரிக்காவில் போம்பெலா (Mbombela) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த காது கேளாத அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். இறுதியாக 11 பேர் கடைசி சுற்றுக்குத் தேர்வானதில் இந்தியப் பெண்ணான விதிஷா ’உலகின் காது கேளாத அழகி 2019’ ( Miss Deaf World 2019) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கு அழகால் மட்டும் வெளிச்சம் கிடைக்கவில்லை. டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்கிறார். உலக அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆக.. விதிஷாவிற்கு இந்த வெற்றி புதிதல்ல என்றே சொல்லலாம். அதேபோல் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம்தான் விதிஷா இந்தியாவின் காது கேளாத அழகி என்ற பட்டம் பெற்றிருந்தார். பட்டத்தை தனதாக்கிய விதிஷா உரையாற்றியபோது “ இந்த நொடி..என்னுடைய கண்ணீரைத் தவிற வேறெந்த வார்த்தைகளும் சிறப்பானதாக இருக்க முடியாது. என்னுடைய கடின உழைப்பு, வலி, காலையில் சீக்கிரம் எழுவது, கடுமையான பயிற்சி இவை எதுவும் வீண் போகவில்லை. எல்லாவற்றிற்கும் இன்று வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் இந்தியாவின் முதல் பெண் என்கிற பெருமை மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்குகிறது. கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்” என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment