19.07.2019
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்துள்ள அந்த சட்ட திருத்த மசோதாவில், 1919-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சென்னை மாநகராட்சி சட்டம் மற்றும், 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ், காது கேளாத, வாய் பேச முடியாத அல்லது தொழு நோயாளிகள் பிரிவைச் சேர்ந்த மக்கள் தேர்தலில் போட்டியிட தகுதி குறைபாடு உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் தற்போது தமிழக மக்கள் தொகையில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் உயர் கல்வி தகுதி பெற்றவர்களாகவும், திறமை கொண்டவர்களாகவும் இருப்பதால், அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வழிவகை செய்யும் வகையில், புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment