FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, December 22, 2024

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்கள்: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


13.12.2024 
ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

மலேசியாவில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டி 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர். வீராங்கனையர் வெவ்வேறு விளையாட்டுக்களில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில், இந்தியா ஒட்டுமொத்தமாக 55 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அதில் 24 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் குவித்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம். பதக்கங்களை வென்ற தம்பிகள் மணிகண்டன், ராக்கப்பன், வினித், சாந்தனு, கார்த்திக், முகம்மது யாசின், சுதன் மற்றும் தங்கைகள் பிரியங்கா, சுபஸ்ரீ, சமீஹா பர்வீன், ஹரினி, ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இப்போட்டியில் பங்கேற்க உதவிடும் வகையில், நம் வீரர்களின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும், 'எலைட் திட்டத்தின் வழியாக தங்கை ஜெர்லின் அனிகாவுக்கும் நிதியுதவி அளித்திருந்தோம். தற்போது பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர் - வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம். நம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம். அவர்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment