21.12.2024 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனி (18.12.2024) வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய ஆட்சியர், ''தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தில் ஓர் அங்கமாகவும், உரிமை பெற்று திகழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா ரூ.17,000/ வீதம் 50 பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8,50,000/ மதிப்பீட்டில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளும், தலா ரூ.17,000/- வீதம் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் ரூ.1,87,000/- மதிப்பீட்டில் தமிழ்நாடு ஈமச்சடங்கு உதவி தொகையும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.2,00,000/ மதிப்பீட்டில் விபத்தால் உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் வாரிசுக்கு நலவாரிய நிவாரண தொகை என மொத்தம் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12,37,000/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment