07.12.2024
குழந்தை பிறப்பிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம், தனியார் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனைக்கான முன்னோடி திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன் வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 6 பேர் செவித்திறன் குறைபாடுடன் பிறக்கின்றனர். குழந்தைகள் பிறந்த உடனே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களுடைய செவித்திறனை மேம்படுத்த முடியும்.
No comments:
Post a Comment