FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, December 15, 2024

நெருங்கிய உறவு திருமணம்: குழந்தைக்குசெவித்திறன் பாதிக்க வாய்ப்பு: டாக்டர் மோகன் காமேஸ்வரன்

நெருங்கிய உறவில் திருமணம் பரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு



10.12.2024 
சென்னை: நெருங்கிய உறவில் திருமணம் புரிவோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்குதொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் 'குட் டீட்' எனப்படும் தன்னார்வ அமைப்பு, காது கேளாத 18 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு, 30 செவித்திறன் கருவிகள் சென்னையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், பேச்சுப் பயிற்சிகளை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையம் வழங்கியது. குழந்தைகளுக்கு செவித்திறன் கருவிகளை பொருத்திய டாக்டர் மோகன் காமேஸ்வரன், நிகழ்வில் பேசியது:

உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காது கேட்காமல் இருந்தால் பேச்சுத்திறனை இழக்க நேரிடும். அறிவு வளர்ச்சி குறைந்துவிடும். செவித்திறன் இல்லாத ஒரே காரணத்தால் அப்துல் கலாம் போன்று உருவெடுக்க வேண்டிய பல குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் இந்திரா மோகன் காமேஸ்வரன், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment