FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Wednesday, December 18, 2024

சென்னையில் ரூ. 50 லட்சம் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திறன் பயிற்சி மையம் - அமைச்சர் தகவல் - CHENNAI SKILL TRAINING CENTER



சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

13.12.2024 சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: '' இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். மேலும், அவர் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள், அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75 சதவீதம் பயண கட்டண சலுகை வழங்குவது என மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

என்னென்ன பயிற்சிகள்:

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2023-2024 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி செவித் திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் 50 லட்சம் செலவில் உயர் கல்வித் துறையின் மூலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல் (Wireman control Panel Electronics), மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் (Wiring Harness Assembly Operator) ஆகிய பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது.

சேர்க்கை தகுதி:

8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச் சான்றிதழ் (National Trade Certificate) பெற்ற மாற்றுத்திறனாளிகள், அதற்கு இணையாக இரண்டு வருட அனுபவம் உள்ள மாற்றுத்தினாளிகள் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயில தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட இரு பாடப் பிரிவுகளிலும் தலா 6 மாத காலத்திற்குப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், உயர் கல்வி பயில வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திறன் பயிற்சி மையம் அமையும்'' என கூறியுள்ளார்.



No comments:

Post a Comment