ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசியர்களாக பணி அமர்த்த வேண்டும். பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனயாக குருப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்து வருகின்றனர்.
புதன்கிழமை காலை தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment