FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Thursday, March 12, 2015

அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !

11.03.2015
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு 9.3.2015 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

“கர்ணகொடூரமாக நடந்துகொள்ளும் இந்த அரசிடம் கருணையை நாம் எதிர்பார்க்க முடியாது. இதை பார்வையற்ற மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒரு இடத்தில் முடங்கிவிடக் கூடாது. இது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் பிரச்சனை. அனைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரட்ட வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்று எழுச்சியுடன் பேசினார்.

பார்வையற்ற இந்த மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதை செவிகொடுத்து கேட்க தயாரில்லாத போலீசோ அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நைச்சியமாக மிரட்டுகிறது.

பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்போது அவர்கள் சொன்னது “புதிதாக ஒன்றும் கேட்கவில்லை சார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன கேட்டோமோ அதையேதான் இப்போது கேட்டு போராடுகிறோம்’’ என்றார்.

இந்த அரசால் செய்ய முடியாத அளவுக்கு அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் தர வேண்டும் என்று கோருகிறார்கள். இதை செய்ய முடியாதா? செய்ய முடியாது என்பதல்ல செய்யக்கூடாது என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

நீண்ட நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவற்றை நிரப்பி வேலையற்ற படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையும், அதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியும் கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டால் அரசுப்பள்ளி, கல்லூரிகள் தரமாகிவிடும், தனியார் பள்ளியை / கல்லூரியை நோக்கிச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளி, கல்லூரியை நோக்கி திரும்பி விடுவார்கள். அப்புறம் தனியார் கல்வி முதலாளிகள் எப்படி கல்லாக் கட்ட முடியும். அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே! இதை செய்யத் துணிவார்களா? அதனால்தான் தங்கள் எஜமானின் விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதில் தப்பில்லை என்று பார்வையற்ற மாணவர்களின் வாழ்வை பறித்து வருகிறது இந்த அரசு.

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • உதவிப் பேராசியருக்கான தகுதித் தேர்வு (NET Or SET) முடித்து நீண்டகாலமாக காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
  • பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கென கண்டறிந்துள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனடியாக குரூப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • பார்வையற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்தி பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
  • படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் நிவாரண உதவித் தொகையினை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  • தற்போது பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • 01.04.2003 க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சம பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.
  • பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத வரும் எழுதுனர்களுக்கு ரூபாய் 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.

பார்வையற்ற மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் போராடியபோது அரசு அவர்களை நடந்திய விதம் மிகவும் கொடூரமானது. போராட்டத்தின் போது கைது செய்து சென்னைக்கு ஒதுக்குப் புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தன்னந்தனியாக விட்டு விட்டு வருவது என்பதை ஒவ்வொருமுறையும் செய்து மாணவர்களை உயிரோடு கொல்ல முயன்றது. அதில் பல நேரங்கள் இரவு நேரங்கள்.

அதுமட்டுமல்ல பார்வையற்ற மாணவிகளை போலீசு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கின. அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பணியாத பார்வையற்ற மாணவர்கள் உறுதியாக போராடினார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் கண்ட பலன் வெறும் வாக்குறுதிகள்தான். இப்போதும் அதே வழிமுறைகளில் பார்வையற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு எத்தனிக்கும்.

நாம் என்ன செய்யப்போகிறோம். வேடிக்கை பார்ப்பது அவமானம். போராடும் பார்வையற்ற மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டியது கருணையல்ல, நமது கடமை.

- வினவு

No comments:

Post a Comment