FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, November 1, 2015

கடின உழைப்புக்கு முன் உதாரணம் மெழுகுவர்த்தி தயாரிப்பில் அசத்தும் பார்வையற்றோர்

31.10.2015, புதுடெல்லி: தங்களால் உலகத்தை பார்க்க முடியாவிட்டாலும், தாங்கள் செய்யும் பொருட்களால் உலகமே வெளிச்சத்திற்கு வருவதற்காக உழைக்கின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட லோதி சாலை அருகிலுள்ள லால் பகதுர் சாஸ்திரி சாலையில் உள்ளது பார்வையற்றோர் நிவாரண சங்கம். இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் உள்ளனர். இவர்கள் தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக மெழுகுவர்த்தி செய்யும் தொழிலை செய்கின்றனர்.

இதுகுறித்து பார்வையற்ற நிவாரண சங்க திட்ட இயக்குனர் டேவிட் கூறியதாவது: இந்த மையம் பார்வையற்றோருக்கான மறுவாழ்வு மையமாகவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இங்கு பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 பேர் உள்ளனர். இதில் 210 பேர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மற்ற 90 பேர் சுய தொழில் செய்பவர்கள். எங்களின் முக்கியமான தொழில் மெழுகுவர்த்தி செய்வது. ஆண்டு முழுவதும் மெழுகுவர்த்திகள் செய்யப்படும். மண் குவளை மெழுகுவர்த்தி உட்பட சுமார் 90 ரகங்களில் இங்கு மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. மூலப் பொருட்களை வாங்கி வருவது, பேப்பர்களை வெட்டித் தருவது போன்ற வேலைகள் மட்டுமே வெளி மார்க்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு வாங்கப்படுகிறது. மற்றபடி மெழுகுவர்த்தி முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

மெழுவர்த்தி செய்வதற்கு மாற்றுத்திறனாளிகளை கொண்டே, பார்வையற்றோருக்கு கற்றுத்தரப்படுகிறது. இதனால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. சுய வேலைகளில் ஈடுபடுபவர்கள் முழு நேரமாகவும், மாணவர்கள் பகுதி நேரத்திலும் மெழுகுவர்த்தி செய்யும் வேலையை விரும்பி செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் விற்பனை கண்காட்சி நடப்பதால், மெழுகுவர்த்தி செய்யும் வேலை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சிறியதாக தொடங்கிய மெழுவர்த்தி செய்யும் தொழில் தற்போது நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. கண்காட்சியின் போது பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் வந்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை நடத்த பலர் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பல மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டு பயணிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு வந்து மெழுகுவர்த்தி வாங்கிச் செல்கின்றனர். மாநில அரசு சார்பில் கண்காட்சிக்கு தேவையான சில உதவிகள் கிடைத்தாலும், ஏற்றுமதி செய்வதற்கும், மற்ற மாநிலங்களில் கண்காட்சி ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் மட்டுமே இங்குள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்றோரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment