FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, June 15, 2015

மாற்றுத் திறனாளிகள் அனுதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது: ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்

15.06.2015, சென்னை 
பிறரிடம் எந்த விதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைன் தெரிவித்தார்.
இவர் தற்போது இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பெனோ ஜெஃபைன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ஐ.எஃப்.எஸ். தேர்வில் இதுவரை பார்வையற்றோர் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பதால் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதில் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற தேர்வுகளுக்கு தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.
தினமும் 5 மணி நேரம்...
என்னைப் பொருத்தவரை எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படித்த தகவல்களை எந்தளவுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியம். எனவே, ஒரே நாளில் 10 புத்தகங்களைப் படிப்பதை விட, ஒரு புத்தகத்தை 10 முறை படிப்பது சிறந்தது. அதாவது திரும்பத் திரும்ப படிக்கும்போது அதில் உள்ள விஷயங்கள் மனதில் நன்கு பதியும்.
இந்தத் தேர்வுக்கு படிப்பவர்கள் தினமும் 5 மணி நேரம் திட்டமிட்டு சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பழைய வினாத்தாள்களையும் தவறாமல் படிப்பது அவசியம். இதை நான் தொடர்ந்து கடைப்பிடித்ததால் வெற்றி வசமானது. நான் எந்தப் புத்தகத்தை விரும்புகிறேனோ அதை எனது தாய் மேரி, எனக்கு பலமுறை படித்துக் காட்டுவார். என்னைச் சுற்றி இருந்தவர்களை என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே நினைக்கவில்லை. என் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முன் மாதிரி: வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாதான் என் முன்மாதிரி.
கணினியில் ஜாஸ் (ஒஹஜ்ள்) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி நன்றாக தட்டச்சு செய்ய பயிற்சி மேற்கொண்டது குடிமைப்பணித் தேர்வை எழுத மிகவும் உதவியாக இருந்தது.
அகில இந்திய வானொலி, தமிழ், ஆங்கிலத் தொலைக் காட்சிகளில் அன்றாடச் செய்திகளை தொடர்ந்து கேட்டது, பொது அறிவு தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் வெற்றி பெற, பிறரைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டும். பிறரிடம் எந்தவிதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பெனோ ஜெஃபைனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அகாதெமியின் இயக்குநர் பூமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment