25.04.2014,
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் மூன்று சக்கர வாகனங்களில் வந்த மாற்றுத்திறனாளிகளை மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தியதால் வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியது:மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோவில் வாக்குச் சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் 200 மீட்டர் தொலைவிலேயே வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.
இதனால் வேறு ஒருவரின் உதவியுடன் மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் வாக்குச் சாவடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன என்றனர்.
கண்டனம்: இந்தச் செயலுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் அதிக ஆர்வம் காட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சாய்தளம், தடையில்லா சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to Dinamani.

No comments:
Post a Comment