FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, April 7, 2014

மாற்றுத் திறனாளிகள் சாதிக்க வேண்டும்

07.04.2014
திறமைகளை வெளிக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட ஆளுநர் கே.ரோசய்யா பேசியது: நாகரிக வளர்ச்சி
காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் மற்றவர்கள் மனதில் உருவாகியுள்ளது.

பிரெய்லி, ஹெலன் கெல்லர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் படைப்புகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஊனம் தடையாக இல்லை என நிரூபித்துள்ளனர். அதுபோல தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சாதனை படைப்பதற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முயல வேண்டும்.

இந்தியாவில் போலியோ உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடியே 68 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 16 லட்சம் பேரும் உள்ளனர். போலியோ நோய்த் தொற்றை முற்றிலும் ஓழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது போலியோ தொற்று இல்லாத நாடாக உலக சுகாதார மையம் இந்தியாவை அறிவித்துள்ளது என்றார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சாதனையாளர் விருதும், 5 பேருக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினர்.

இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கி.கோபிநாத், தலைவர் டி.ஏ.பி.வரதகுட்டி, மாவட்ட செயலாளர் க.அப்புனு, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஏ.கனகராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Thanks to

No comments:

Post a Comment