FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, April 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை

01.04.2014 புதுடில்லி:
'மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல துறைகளில், பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என, 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, இட மாற்றம் மற்றும் பதவியமர்த்துதல் போன்ற விஷயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியாற்ற, எந்த துறையில், எந்த பகுதியில், காலியிடங்கள் உள்ளன என்பது கண்டறியப்படும். இவர்களுக்கு, பதவி உயர்வுக்கான பயிற்சி, இடமாற்றம், விடுமுறை அளிப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அவர்கள், பணிபுரியும் அலுவலகங்களின் அருகாமையில், தங்கும் இட வசதிகளை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to

No comments:

Post a Comment