21.04.2014,
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
இதுவரையான தேர்தல்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியோடுதான் வாக்களிக்கும் முறை இருந்து வந்தது. இதில் அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை என்றும், யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தங்களுக்கான ரகசியத் தன்மை இல்லையென்றும் பார்வையற்றவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இவர்களின் இந்தக் குறையைப் போக்கும் வகையில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் இந்தமுறை அறிமுகப்படுத்த உள்ளது.
பிரெய்லி முறை வேட்பாளர்கள் புத்தகமும், இந்த புத்தகத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு, அவர்களின் வரிசை எண்ணுக்கு ஏற்றாற்போன்று வாக்கு எந்திரத்தில் பிரெய்லி முறையில் வாக்குகளைப் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் யாருடைய உதவியுமின்றி பார்வையற்றவர்கள் ரகசியமாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டாலும், பிரெய்லி படிக்காதவர்களுக்கு இன்னமும் இது குறையாகவே இருக்கும் என்பதும் படிக்காத பார்வையற்றவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
உலகில் உள்ள 39 பில்லியன் பார்வையற்றவர்களில் 20 % வீதம் (7.8 பில்லியன் மக்கள்) இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment