FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, December 9, 2014

12ல் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

09.12.2014, கோவை:
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி போட்டியில் ரூ.70, ரூ.50, ரூ.30 ரொக்கத் தொகை பரிசை கண்டித்து டிச.12ம் தேதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி 2014-15ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட அளவிலான மாற்றுத்திற னாளி விளையாட்டு போட் டிகள் வரும் 12ம் தேதி பெரிநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலாயா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இதில் ஆண்கள், பெண்களுக்கென 50மீ, 100மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண் டுதல், மினி கூடை ப்பந்து எறிதல், 100மீ சக்கர நாற்காலி ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் டென்னிஸ்பந்து எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டி நடத்தப்படுகிறது.
மேலும், போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 70 ரூபாயும், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு 50 ரூபாயும், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு 30 ரூபாயும் வழங்கப்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்ததுள்ளது.
இந்த பரிசுத்தொகை அறிவிப்பிற்கு கோவையில் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடத்தப்படும் நாளன்று போட்டி நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலை வர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 2011 கணக்கெடுப்பின் படி 1.14 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான விளை யாட்டு போட்டி வரும் 12ம் தேதி கோவையில் நடக்கிறது என விளையா ட்டு ஆணையம் (கோவை மண் டலம்) தெரிவித்துள் ளது. போட்டியில்முதலிடம் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.70, ரூ.50, ரூ.30 எனும் பரிசுத் தொகை அறிவித்தது மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் செயலாக உள்ளது.
இந்தப் பரிசு வழங்குவதற்கு பதிலாக போட்டியே நடத்தாமல் இருக்கலாம். மேலும் 12ம் தேதி போட்டி நடக்கும் இடத்தில் கேலிபர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும்.

No comments:

Post a Comment