13.12.2014, ஊட்டி:
"தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால், ஊனம் ஒரு குறையல்ல' என, விழாவில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:மாற்றுத் திறனாளிகள், உடலில் ஊனமிருந்தாலும், மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாநில அரசின் சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 60 தையல் இயந்திரம், 30 பிரெய்லி, 18 காதொலி கருவிகள் வழங்கப்பட உள்ளன. கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றிய, 1,789 பேருக்கு, அரசு பராமரிப்புத் தொகையாக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 29 பேருக்கு, திருமண உதவித் தொகை, 34 பேருக்கு வேலை வாய்ப்பிற்கான வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பின், 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், 4,000 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு தையல் இயந்திரம், 250 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற காது கேளாத மாணவிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 4,500 ரூபாய் மதிப்பில் இரண்டு பேருக்கு சக்கர நாற்காலி என, மொத்தம் 44 பயனாளிகளுக்கு, 7 லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், "தாட்கோ' தலைவர் கலைச்செல்வன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
அரசு காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை மரிய பாஸ்கா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment