Friday, 28 November, 2014 03:20 PM
சென்னை, நவ.28: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 4 பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
ஆயிரம்விளக்கு தொகுதி, 113-வது வார்டுக்கு உட்பட்ட லிட்டில் பிளவர் காது, வாய்பேசாதோர் பள்ளி, வித்யோதயா பள்ளி, கர்நாடக சங்கம் பள்ளி, எம்.சி.எம். பள்ளி உள்ளிட்ட 4 பள்ளியை சேர்ந்த 400 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வார்டு கவுன்சிலர் சாந்தி பாஸ்கர் முன்னிலையில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்சி, கவுன்சிலர்கள் எஸ்.சக்தி, யு.கற்பகம், டி. சிவராஜ், புஷ்பாநகர் ஆறுமுகம், நிர்வாகிகள் வழக்கறிஞர் சதாசிவம், கேபிள் டிவி மாரி, பன்னீர்செல்வம், வில்லியம்ஸ், சாலை முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment