27.12.2014
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஷம் என்ற பெயரில் தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்திட பயிற்சிகள், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான உதவிகள், பொருளாதாரத்தை மேம்படுத்திட தொழிற் பயிற்சி, கடனுதவி பெற்றுத் தருதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்சார்பில், சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு காமாட்சியம்மன் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
இதில், மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார் கொடியேற்றினார். ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.
அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலர் பி.கண்ணன், ஒருங்கிணைப்பாளர் கே.மாரிமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த பேரணி காமாட்சியம்மன் மண்டபத்தைச் சென்றடைந்தது. ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர். 28) இம்மாநாடு நிறைவடைய உள்ளது.

No comments:
Post a Comment