FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, December 29, 2014

அரசு வேலை வாய்ப்பில் அதிக ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை

29.12.2014, தஞ்சாவூர்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனுடையோர் தினவிழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி மலர் வாலண்டினா தலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் மாரிசாமி, செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஊனத்தின், 60 சதவீதத்தில் உள்ள அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளங்கள் மற்றும் கழிவறைகள் அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகளுக்கு தாட்கோ மானியம் பெற காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பில், 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். கம்ப்யூட்டர் முதுகலை, இளங்கலை ஆகியவை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, உடனுக்குடன் பணிவரன்முறை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் செய்யும் வணிக தொழில்களுக்கும், சிறு வணிக தொழில்களுக்கும் வீட்டு உபயோக மின் கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருக்கும் தமிழக அரசு பிரையில் அச்சகம் மீண்டும் செயல்பட வேண்டும். பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரையில் பாடப்புத்தகங்கள் அச்சடித்து இலவசமாக வழங்க வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஹாஜாமொய்தீன், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க வக்கீல் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment