மேட்டுப்பாளையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியில் பயின்று வந்த வாய் பேச இயலாத 17 வயது மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் பள்ளி ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அப்பள்ளி கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட அப்பள்ளியில் இருந்த 30க்கும் அதிகமானோர் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் விடப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் நீதிபதி சுப்பிரமணியம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சைகை மூலம் தெரிவித்த கருத்துக்களை அரசு வாய் மற்றும் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் நீதிபதியிடம் விளக்க, அவர் பதிவு செய்து கொண்டார்.
Tuesday, December 9, 2014
மேட்டுப்பாளையத்தில் DEAF மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை: நீதிபதி நேரில் விசாரணை
மேட்டுப்பாளையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பள்ளியில் பயின்று வந்த வாய் பேச இயலாத 17 வயது மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் பள்ளி ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி அப்பள்ளி கடந்த ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட அப்பள்ளியில் இருந்த 30க்கும் அதிகமானோர் கோவையில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் விடப்பட்டனர். இந்த வழக்கு தற்போது கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் நீதிபதி சுப்பிரமணியம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி சைகை மூலம் தெரிவித்த கருத்துக்களை அரசு வாய் மற்றும் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் நீதிபதியிடம் விளக்க, அவர் பதிவு செய்து கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment