FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, March 5, 2017

தெய்வக் குழந்தைகளுடன் 2 மணி நேரம்! சமுதாய சேவையில் ஐ.டி., ஊழியர்கள்

04.03.2017
அவர்களை தெய்வக்குழந்தைகள் எனலாம். எண்ணற்ற திறமைகள் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர ஊக்குவிப்பாளர்கள் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் முடங்குகியுள்ளனர். உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்ல, அவர்களது உதடுகள் துடிக்காது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், நமது கேள்வியே அவர்களது செவிகளில் விழாது. ஆம், அவர்கள் யாரெனில், வாய்பேச முடியாத, காதுகேளாத மாணவ - மாணவியர்.

இவர்கள் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கக் கூடாது; கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஆர்.எஸ்.புரத்தில் உயர்நிலைப்பள்ளியை நடத்துகிறது, மாநகராட்சி. இங்கு, 32 பேர் படிக்கின்றனர். இவர்களில், நான்கு பேர் மாணவியர். ஐந்து ஆசிரியர்கள், சைகை மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.
இவர்கள், நன்றாக படித்தாலும், வேலை கிடக்காமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தொழிற்கூடமும் நடத்தப்படுகிறது. கோயமுத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள் சாரிடபிள் சொசைட்டி சார்பில், 'பிட்டிங், டிரில்லிங், வெல்டிங், பிளம்மிங்' உள்ளிட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும், 45 நிமிடம் தொழிற்கல்வியை, 25 ஆண்டுகளாக சந்தானம் என்பவர் பயிற்றுவிக்கிறார். அவர் கூறுகையில், ''காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவ, மாணவியருக்கு தொழிற்கல்வி கற்றுத்தருவதோடு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 300 முதல், 500 ரூபாய் தினச்சம்பளம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஓரளவு சமாளித்துக் கொள்வர்,'' என்றார்.

இப்பள்ளி செயல்பாட்டை அறிந்த, ஐ.டி., நிறுவன ஊழியர்களான மீனாட்சி, ப்ரீத்தி ராமசாமி ஆகியோர், அம்மாணவர்களுடன் விவாதித்த போது, மாணவர்கள் சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, ஆரோக்கியமுடன் வாழ விளையாட்டு முக்கியம் என, அவ்விரு ஊழியர்களும் எடுத்துரைத்தனர்.

இருவருமே மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள். தங்களது திறமையை இவர்களுக்கு பயிற்றுவிக்க முடிவு செய்து, தினமும் 2 மணி நேரம் ஒதுக்குகின்றனர். காலை, 8:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை, காதுகேளாத, வாய்பேச முடியாத அம்மாணவர்களுக்கு வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் பயிற்சி அளிக்கின்றனர். தங்களது சொந்த செலவில், சீருடை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அவர்களும் ஆர்வத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.

மீனாட்சி கூறுகையில், ''ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். பணம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இப்பள்ளியை பற்றி கேட்டறிந்ததும், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க அனுமதி கேட்டோம். மாநகராட்சி அனுமதி கிடைத்ததும், எங்களது செலவில் மைதானம் தயார் செய்து, ஏழு மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறோம். இதில், எங்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது,'' என்றார்.இவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால், 97895 51573 என்ற எண்ணுக்கு 'டயல்' செய்யுங்க!

No comments:

Post a Comment